Monday, July 22, 2013

தண்ணீரை சுத்தப்படுத்த பழங்கள் போதும்


தண்ணீரை சுத்தப்படுத்துவதில் பல்வேறு தொழில்நுட்பங்கள் காணப்பட்டாலும், சற்று வித்தியாசமான முறையை கையாளுகிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர்.
இந்த புதிய தொழில்நுட்பத்தில் தக்காளி மற்றும் ஆப்பிள் தோல்களை பயன்படுத்தி தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்று கண்டுபிடித்துள்ளார்.

தக்காளி தோல்கள் மாசுபட்ட தண்ணீரின் கழிவு பொருட்கள், அதில் கரைந்திருக்கும் ரசாயனம் மற்றும் சாயபொருட்கள், பூச்சிகொல்லி மருந்துகளை நீக்கும் தன்மையானது.
மேலும் ஆப்பிள் தோலானது தண்ணீரில் கலந்திருக்கும் கழிவுகளை உறிஞ்சும் தன்மை உடையதாகும்.
இந்த புதிய தொழில்நுட்பத்தை சிங்கப்பூர் நேஷனல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா மல்லம்பட்டி என்பவர் கண்டுபிடித்துள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
இதற்கு மிகக் குறைந்த செலவேயாகும் என்றும் இந்த சுத்திகரிப்பு எந்திரம் செயல்பட, மின்சாரம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment