Saturday, February 04, 2012

சிம்புவை பற்றி சில பக்கங்கள்!







தமிழ் சினிமாவிற்கு இளமையின் பரிசு சிம்பு. பிறக்கும்போதே நடிகனாக அடையாளம் காணப்பட்டவர். நேற்று பிறந்தநாள் கொண்டாடிய சிம்புவின் அதிகம் அறியப்படாத சில பக்கங்கள் இதோ...

* சிம்பு பிறந்தது 1985-ல். குடும்பத்திற்கு முதல் வாரிசு எப்போதும் அம்மா செல்லம். சிம்பு மட்டும் எது கேட்டாலும் கிடைக்கும். மற்ற ஒரு சகோதரி, சகோதரனுக்கும் அம்மா கொடுக்கிற பாக்கெட் மணி ரேஷன்தான்.
* அம்மா வயிற்றில் இருக்கும்போதே வாத்யக் கருவிகளை இசைத்துக் காட்டுவாராம் அப்பா டி.ஆர். இதை பெருமையாக இன்றும் சொல்வார்.
* படித்தது பத்தாவது வரைதான். அதற்குப்பிறகு படிப்பு ஏறவில்லை. உடனே சினிமாவில் தீவிரமாக சேர்ந்துவிட முடிவு செய்து, அப்பாவிடம் சரண்டர் ஆனவர் சிம்பு. ஆரம்பகாலங்களிலிருந்து அப்பாதான் கால்ஷீட் விவகாரங்கள், சம்பளம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.
* விடியற்காலையில் பேப்பர் பார்க்கிற முதல் விஐபி சிம்புதான். அதை அவரே சொல்வார். காரணம்: வெளியே அவுட்டிங் போய்விட்டு காலையில்தான் அவர் வண்டி வீட்டிற்குள் நுழையும்.
* இளம் வயதினிலேயே அதிகாரபூர்வமாக டைரக்ட் செய்து ஹிட் அடித்தது 'வல்லவன்' படத்தில். இப்பவும் அடுத்த டைரக்ஷனுக்காக நல்ல ஸ்கிரிப்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார் சிம்பு.
* ஒரே ஏரியாவில் சூர்யா, கார்த்தி, ஜீவா, சிம்பு என நடிகர்கள் பட்டாளமே வசித்தாலும் சிம்புவுக்கு யாரிடமும் பெரிய பேச்சுவார்த்தைகள் ஏதும் கிடையாது. பெரும்பாலும் தனிமை விரும்பி. ஸ்கூலில் படித்த நண்பர்களோடு மட்டும்தான் வெளியே சுற்றுவார். சினிமா வட்டாரத்தில் அனேகமாக பெரிய அளவில் நண்பர்களே கிடையாது.
* இதுவரை 27 படங்கள் நடித்திருக்கிறார். பெரிய அளவில் அவருக்கு பெயரையும் வெற்றியையும் தந்த படங்கள் 'மன்மதன்', 'வல்லவன்',  'விண்ணைத்தாண்டி வருவாயா', 'தொட்டி ஜெயா'.
* கார்களின் மீது பெரும் மோகம் உண்டு. அடிக்கடி காரை மாற்றிக்கொண்டே இருப்பார். அப்பாவிடம் ஆசைப்பட்டு கேட்டு அவருக்கு வந்த பரிசுதான் ஒரு கோடி கார்... அதில் மிக நெருக்கமான நண்பர்களை மட்டுமே ஏற்றுவார்.
* பிரியாணி என்றால் உயிர். மட்டன் பிரியாணி என்றால் ருசித்து ருசித்து சாப்பிடுவார். எங்கே சுவையான பிரியாணி கிடைத்தாலும் வாங்கி வரச்சொல்லி சாப்பிட்டு மகிழ்வார்.
* தங்கை இலக்கியா மீது கொள்ளைப் பிரியம். தங்கை படிக்கும் கல்லூரிக்கே அடிக்கடி போய்ப் பார்ப்பார். தங்கை எது கேட்டாலும் வாங்கித்தரும் பாசமலர் அண்ணண். தங்கைக்கு சரியான மாப்பிள்ளை பார்ப்பதில் இப்போது அண்ணன் பிஸி.
* 'LOVE ANTHEM' படைப்பில் இப்போது முனைப்போடு இருக்கிறார். இசைகோர்ப்பு பணியில் இப்போது பிஸி. ஆங்கிலம் அதிகம் கலந்த தமிழ் வரிகளை தமிழுக்கு அறிமுகம் செய்ததில் 'கொலவெறி'க்கு முன்னோடி சிம்பு.
* திடீரென அப்பா பெயரையும், தாத்தா பெயரையும் சேர்த்து சிலம்பரசன் தேசிங்கு ராஜேந்தர் (S.T.R) என பெயர் மாற்றிக்கொண்டு விட்டார் சிம்பு. கெஜட் அறிவிப்பு வரைக்கும் போய் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
* சிம்புவிற்கு பிடித்த நடிகைகள் ஜோதிகா, அனுஷ்கா. அவர்களோடு ஜோடி போட்டு நடிக்க வேண்டுமென்றால் எப்பவும் ரெடி.
* தீவிர தெய்வபக்தி உடையவர். அனுமார் பக்தர். காலையில் பதினோரு மணிக்கு எழுந்தவுடன் யோகா, தியானம் சின்ன உடற்பயிற்சி என நீண்டு மதிய உணவு சாப்பிடுவார்.
* எப்பவும் அரசியலில் ஆர்வம் கிடையாது. அப்பாவின் அரசியல் விஷயங்களில் தலையிட மாட்டார். ஓட்டுப்போடுவது மட்டும்தான் இப்போது சிம்புவின் வேலை. இருந்தாலும் கலைஞரும், ஜெயலலிதாவும் ஒரு நிகழ்ச்சியில் பாராட்டியதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வார்.
* பத்திரிகையாளர்களுக்கு வெல்லமாய் இனிப்பார் சிம்பு. அவர்களுக்கு தீனி போடுவதில், சுவாரஸ்யமாகப் பேசுவதில் சிம்பு வெளிப்படையாக இருப்பார்.
* காதல் சிலவற்றில் கசந்து, இப்போது அம்மா பார்த்து வைக்கிற பெண்ணே போதும் என்ற பாதுகாப்பு நிலைக்கு வந்துவிட்டார் சிம்பு. இருந்தாலும் காதலித்தால் நல்லாயிருக்குமே என்றும் சிந்திக்கிறவர்.
* முதல் தடவையாக 'போடா போடி' என இன்னொரு படத்தையும் ரெடியாக வைத்திருக்கிறார். ஒரு படம் நடித்து முடித்த பிறகுதான் அடுத்தப்படம் என்பதில் இருந்து சற்றே விலகி செய்கிற படம்தான் இது.
* முன்கோபக்காரர். முணுக்கென்று கோபம் வந்துவிடும். ஆனால் என்ன சொன்னாலும் அம்மா பேச்சுக்கு மட்டும் கட்டுப்படுவார் சிம்பு.
* ஆன்லைனில் ரசிகர்கள் எண்ணிக்கை சிம்புவுக்கு அதிகம். அவரது பேஸ்புக் இணையத்தில் 2,50,000 அதிகமானோர் இருக்கிறார்கள். அவர்களுக்காக தின நடவடிக்கைகளை அப்டேட் செய்கிறார் சிம்பு.
* நடிகர்களில் அஜித்துக்கு பெரிய ரசிகர் சிம்பு. எல்லாப் படங்களிலும் 'தல' என்கிற வார்த்தையை நுழைத்து விடுவார். இப்பவும் எதற்காகவாவது ஆலோசனை என்றால் அப்பாவும், அஜித்தும்தான் அவரது அடைக்கலம்.
* இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் 'வேட்டை மன்னன்' 40% முடிந்துவிட்டது. 'போடாபோடி' இசை கோர்ப்பு வேலை நடக்கிறது. 'வட சென்னை' 90களில் நடக்கிற கதை. வெற்றிமாறன் அவரை அமெரிக்காவிலிருந்து வந்ததும் வடிவம் மாற்ற ரெடியாக இருக்கிறார்.
* சினிமா மட்டும்தான் பொழுதுபோக்கு. பார்ட்டி, சினிமா எல்லாவற்றுக்கும் பெரும் படையோடுதான் செல்வார். பார்ட்டிகளில் இவர் ஆடும் கடைசி குத்துடான்ஸ் பிரசித்தமானது.
* கிரிக்கெட்டின் ரசிகர். முன்னாட்களில் மற்ற ஹீரோக்களோடு சேர்ந்து விளையாடியவர், இப்போது ஒதுங்கிவிட்டார். புத்தகம் படிக்க மாட்டார். இவரிடம் இருக்கும் ஹாலிவுட் படங்களின் சேகரிப்பு பலரை பொறாமை கொள்ளச் செய்யும். ஆயிரக் கணக்கில் படங்கள் இருக்கிறது இவரது லைப்ரரியில்.
* திரையுலகில் ஜெய், பிரேம்ஜி, வெங்கட்பிரபு மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் மட்டும் கொஞ்சம் நெருங்கிய நண்பர்கள்!
* தனது அப்பா கூறும் ஜோதிடத்தின் மீது மிகவும் நம்பிக்கை உடையவர் சிம்பு.
* சந்தானத்தை திரையுலகில் பிரபலப்படுத்தியதில் சிம்புவின் பங்கு அதிகம். சிம்பு-சந்தானம் காம்பினேஷன் என்பது விநியோகஸ்தர்களின் 'ரெண்டு லட்டு' தின்னும் ஆசை. இந்த வருஷம் எத்தன லட்டு திங்கப் போறாரோ..

No comments:

Post a Comment