Saturday, January 07, 2012

அபாயம் சினிமா விமர்சனம்



நரேஷ், சுவாதி, ஷெரீன், சத்யபிரகாஷ், ஷபீ ஆகிய ஐவரும் நண்பர்கள். இவர்களில் சுவாதிக்கு திருமணம் நிச்சயமாகிறது. அதை கொண்டாட நைட் பார்ட்டிக்கு செல்கின்றனர். அப்போது போலீஸ் ரெய்டு வர
 
நண்பர்கள் காரில் தப்புகின்றனர்.  
போலீஸ் வேன் பின்னால் விரட்டுகிறது. இருட்டில் பாதை தெரியாமல் ஐவரும் அடர்ந்த காட்டில் சிக்குகின்றனர். அங்கு ஒரு கும்பல் பச்சிளம் குழந்தையை நரபலி கொடுப்பதை பார்த்து அதிர்ச்சியாகி அதை வீடியோவில் பதிவு செய்கின்றனர்.
 
நரபலி கும்பல் நண்பர்களை பார்த்து விடுகிறது. அவர்களை கொல்ல துரத்துகின்றனர். தப்பினார்களா என்பது கிளைமாக்ஸ். திகில், விறுவிறுப்பில் திரைக்கதையை எக்ஸ்பிரஸ் வேகத்தில் நகர்த்துகிறார் இயக்குனர் கிருஷ்ணவம்சி. ஜாலி, கொண்டாட்டம் பெற்றோருக்கு அடங்க மறுத்தல் என இளைஞர்களின் இக்கால மன ஓட்டம் அழுத்தமாக பதிவாகியுள்ளது.
 
ஆண், பெண்களின் எல்லை மீறாத நட்பில் ஜீவன். நண்பர்கள் காட்டுக்குள் வழி மாறிச் செல்வதும் அங்கே நடக்கும் நரபலியும் குலை நடுக்கம்... உள்துறை மந்திரி, முதல்-மந்திரியாக  நரபலி செய்த முடிச்சு அவிழ்வதும் போலீஸ் உதவியோடு நண்பர்களை கொல்ல படையெடுப்பதும் சீட் நுனிக்கு இழுக்கின்றன.
 
சுவாதியும், ஷெரீனும் நட்பு, பய உணர்ச்சிகளில் வீரியம் காட்டுகின்றனர். போலீஸ் அதிகாரியாக வரும் ஷர்பி கொடூர வில்லன். போலீஸ், கொலைக்கார ரவுடி கூட்டங்கள் துரத்தலில் இருந்து நண்பர்கள் உயிர்ச் சேதமின்றி தப்புவது சினிமாத்தனம். ஜோஸ்வா ஸ்ரீதரின் பின்னணி இசை காட்சிக்கு பயமூட்டுகிறது.
 
 
 
 

No comments:

Post a Comment