Monday, July 22, 2013

உலகிலேயே தலைசிறந்த டாக்ஸி அம்பாசிடர்

உலகிலேயே தலைசிறந்த டாக்ஸியாக அம்பாசிடர் தெரிவாகியுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த மோட்டார் மியூசியம் பிலியு என்ற அமைப்பு, உலகில் உள்ள டாக்சிகள் குறித்து ஆய்வு நடத்தியது.
ஆய்வின் முடிவில்,
உலகின் தலைசிறந்த டாக்சியாக அம்பாசிடர் தெரிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் முதன்முதலாக 1980களில் மாருதி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதுவரை அம்பாசிடர்தான் இந்திய சாலைகளை கடந்து வந்தன.
1948ம் ஆண்டு அம்பாசிடர் காரை மேற்கு வங்க மாநிலம் உத்தர்பரா என்ற இடத்தில் பிர்லா குழுமத்தின் இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்யத் தொடங்கியது.
இந்நிலையில் உலக டாக்சிகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி அம்பாசிடர் முதலிடம் வகிப்பது தற்போது தெரியவந்துள்ளது.
அமெரிக்கா, ஜேர்மனி, இங்கிலாந்து, மெக்சிகோ தென்ஆப்பிரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளின் டாக்சிகளை அம்பாசிடர் வென்றுள்ளது.
பிபிசியில் ஒளிபரப்பி வரும் டாப் கியர் என்ற நிகழ்ச்சியில்தான் அம்பாசிடர் சிறந்த டாக்ஸியாக தெரிவு செய்யப்பட்டது.
அம்பாசிடருக்கு தரம் இருந்தாலும் கூட விற்பனை குறைவாகவே காணப்படுகின்றன. கடந்த 2012-2013ல் மொத்தம் 3390 அம்பாசிடர் கார்கள் தான் விற்றன என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அம்பாசிடரை மீண்டும் புதிய மாற்றங்களைச் செய்து அம்பி என்ற பெயரில் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment