Sunday, July 21, 2013

தக்காளி ஒரு சிறந்த அழகுக் கலை நிபுணர்






தக்காளி ஒரு சிறந்த அழகுக் கலை நிபுணர் என்றே கூறலாம். தக்காளியைப் பயன்படுத்தி உங்களை அழகாக்கிக் கொள்ள
இதோ டிப்ஸ்:

 • கண்ணிற்குக் கீழ் உள்ள கருவளையத்துக்கு தக்காளியுடன் வெள்ளரித்துண்டை சேர்த்து அரைத்து இமைகளின் மேலும், கருவளையம் உள்ள இடத்திலும் பூசினால் கருவளையம் காணாமல் போகும்.
 
 • தக்காளியை தோல் மற்றும் விதைகள் நீக்கி கூழாக்குங்கள். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவுங்கள். அதன் மேல் இந்த கூழைத் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்தால் ஒட்டிய கன்னங்கள் "புஸ் புஸ்' என்றாகிவிடும்.
 
 • உருளைக்கிழங்கு துருவல் சாறு 1 தேக்கரண்டி, தக்காளி விழுது அரை தேக்கரண்டி இரண்டையும் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.
 
 • தக்காளி விழுது, பாதாம் விழுது தலா அரை தேக்கரண்டி எடுத்து கலந்து முகத்தில் தடவுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.
 
 • முகத்தில் மிருதுத்தன்மை மாறி முரடாகிவிட்டதா? தக்காளி விழுதுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் பூசுங்கள்.
 
 • தக்காளிச் சாறுடன் சிறிது ரவையைக் கலந்து முகத்தில் தேய்த்துக் கழுவினால் முகம் பிரகாசிக்கும். இதுதான் இயற்கை
 "ஸ்கரப்பர்'

No comments:

Post a Comment