குன்னூர்:ஊட்டி மலை ரயில் வரலாற்றை புத்தகமாக வெளியிட, இங்கிலாந்து நாட்டுப் பயணக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டனர்.உலக அளவில் சுற்றுலாப் பயணிகளின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நீலகிரி மலை ரயில் குறித்து ஆய்வு மேற்கொள்ள, இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வந்திருந்தனர். சிறப்பு மலை ரயில் மூலம், மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே பயணம் செய்தனர்.
சுற்றுலா குறித்து குழு ஒருங்கிணைப்பாளர் பாப்கேபிள் கூறியதாவது: டார்ஜிலிங் மலை ரயில் வரலாற்றை ஏற்கனவே புத்தகமாக வெளியிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு, நீலகிரி மலை ரயிலின் வரலாற்றை புத்தகமாக வெளியிட முடிவு செய்துள்ளோம். அற்புதமான முறையில் தயாரிக்கவுள்ள இப்புத்தகத்தில் நீலகிரி மலை ரயிலின் அனைத்து அம்சங்களும் இடம் பெற்றிருக்கும்.
வருங்காலங்களில், ஊட்டி மலை ரயிலில் பயணிக்க அதிக அளவு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை பயணம் செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வோம். இந்த ரயில் "யுனெஸ்கோ' அமைப்பால் பாரம்பரிய அந்தஸ்து பெற்றுள்ளது பாராட்டுக்குரியது.இவ்வாறு பாப்கேபிள் கூறினார்.
No comments:
Post a Comment