Sunday, March 04, 2012

ரூ.1.50 லட்சத்துடன் சாலையோரம் தூங்கிய முதியவர் மகனிடம் ஒப்படைப்பு.






 முதுநகர்: கடலூரில், 1.50 லட்சம் ரூபாய் பணத்துடன், சாலையோரத்தில் தூங்கிய, மனநிலை பாதித்த சென்னை முதியவரை, போலீசார் மீட்டு, மகனிடம் ஒப்படைத்தனர்.


கடலூர் முதுநகரில், நேற்று அதிகாலை, போலீஸ்காரர்கள் வெங்கடேசன், செல்வகுமார் ஆகியோர், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். முதுநகர், காமாட்சி அம்மன் கோவில் அருகே, சாலையோரத்தில், கையில் துணிப் பையுடன் தூங்கிக் கொண்டிருந்த முதியவரை எழுப்பி, விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில், 1.50 லட்சம் ரூபாய் இருந்தது. லேசாக மனநிலை பாதித்திருந்த அவர், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், 75, என்பதும், குடும்பப் பிரச்னை காரணமாக கடந்த, 12 நாட்களுக்கு முன், 1.50 லட்சம் ரூபாயுடன் வீட்டைவிட்டு வெளியேறி, பல ஊர்களுக்குச் சென்று, கடலூர் முதுநகர் வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரது மகன் அனந்தராம கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். காலை, 11 மணிக்கு, கடலூர் முதுநகர் வந்த அனந்தராம கிருஷ்ணனிடம், சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் விசாரணை நடத்தி, முதியவரையும், பணத்தையும் ஒப்படைத்தார்.

No comments:

Post a Comment