Saturday, March 03, 2012

அதிக திருமணம் நடத்திவைத்தவர் சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பு








போபால் : மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் தாலு பைய்யா என்பவர். இவரின் சாதனை லிம்கா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளது. மத்திய பிரதசே மாநிலத்தை சேர்ந்தவர் தாலுபைய்யா என்கிற ராம் கோபால்
. பெராசியா என்ற பகுதியில் வசித்து வரும் இவர் ரோடு காண்டிரக்டராகவும் உள்ளார். இதுமட்டுமல்லாது அப்பகுதியில் உள்ளவர்களுக்கு திருமணத்தை நடத்தி வைக்கும் வேலை செய்து வருகிறார். கடந்த‌ 2007-ம் ஆண்டு முதல் இன்று வரையில் சுமார் 785 ஜோடிகளை இணைத்து வைத்துள்ளார். இவரது சேவையை லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பதிவு செய்துள்ளது. முதன் முறையாக 2007-ல் 34 பெண்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார். 2008-ல் 86 ஜோடிகளுக்கும் , 2009-ல் 88 ஜோடிகளுக்கும், 2010-ல் 208 பேர்களுக்கும், கடந்த ஆண்டு 213 பேர்களுக்கும் திருமணம் நடத்தி வைத்திருப்பதாக கூறும் இவர், திருமண செலவாக சுமார் 17 ஆயிரம் மட்டுமே ஆவதாகவும், ஆத்ம திருப்தி தருவதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment