பெரு நாட்டைச் சேர்ந்த, மூன்று வயது சிறுவனின் வயிற்றில், கரு உருவாகியுள்ளதாக வெளியான தகவல், உலகம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
. இந்த கரு, அரை கிலோவுக்கும் குறைவான எடையுடன், ஒன்பது அங்குல நீளத்தில், ஒரு மரப்பாச்சி பொம்மை போல் இருப்பதாகவும், மூளை, இதயம் போன்றவை அதில் உருவாகவில்லை என்றும் டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனாலும், கண்கள், எலும்புகள் போன்ற தோற்றங்கள், அந்த கருவில் உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அதிசய சம்பவம் குறித்து டாக்டர்கள் கூறுகையில், "ஐந்து லட்சம் பேரில் ஒருவருக்கு, இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இரட்டை குழந்தைகளின் கருக்கள், இந்த சிறுவனின் தாயின் வயிற்றில் உருவாகியிருக்கும். அதில், ஒரு கரு மட்டும் வளர்ச்சியடைந்து, இந்த சிறுவன் பிறந்துள்ளான். மற்றொரு கரு வளர்ச்சி அடையாமல், அந்த சிறுவன் கருவில் இருக்கும்போதே, அதற்குள் ஊடுருவியதால், இந்த வினோதமான நிகழ்வு நிகழ்ந்துள்ளது...' என்றனர். சிறுவனின் வயிற்றில் இருக்கும் கருவை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும், சிறுவனின் வயிற்றில் இருந்து, கரு அகற்றப்படலாம்.
No comments:
Post a Comment