சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன், பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்களை வழங்கவும், இரண்டு லட்சம் விண்ணப்பங்களை அச்சிடவும், அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.
மே முதல் வாரத்தில்...
வரும் 8ம் தேதி, பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்குகிறது. மே இரண்டாவது வாரத்தில் முடிவுகள் வெளியாகிவிடும். எனவே, பொறியியல் சேர்க்கைக்கான முன்னேற்பாடுகளில், அண்ணா பல்கலை கவனம் செலுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு, மே 9ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன; மே 16ம் தேதியில் இருந்து, பொறியியல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு, மே முதல் வாரத்தில் இருந்தே, விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு, ஒன்றரை லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன; 1 லட்சத்து 48 ஆயிரத்து 355 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இரண்டு லட்சம் மாணவர்கள், இந்த ஆண்டு விண்ணப்பிக்கலாம் என, அண்ணா பல்கலை எதிர்பார்க்கிறது.
அனுமதி கிடைக்குமா?
மாநிலத்தில், 522 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. 48 கல்லூரிகள், ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன. கவுன்சிலிங் துவங்குவதற்குள், இந்த கல்லூரிகளுக்கு அனுமதி கிடைக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், கடந்த ஆண்டு கவுன்சிலிங் நடந்து கொண்டிருக்கும்போதே, 40க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி வழங்கியது. இதனால், கவுன்சிலிங் இடங்களும் அதிகரித்தன. கடந்த ஆண்டு, ஜூலை 8ம் தேதி துவங்கிய கவுன்சிலிங், ஆக., 11ம் தேதி வரை நடந்தது. 1 லட்சத்து 40 ஆயிரத்து 517 மாணவர்கள் அழைக்கப்பட்டதில், 1 லட்சத்து நான்காயிரத்து 153 பேருக்கு, சேர்க்கை உத்தரவு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு சேர்க்கை நிலவரம்
கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டவர்கள் 1,40,517
* இட ஒதுக்கீடு 1,04,153
* வராதவர்கள் 36,030
* நிராகரிப்பு 5
* இடம் எடுக்காத மாணவர்கள் 329
* வராதவர்கள் 36,030
* நிராகரிப்பு 5
* இடம் எடுக்காத மாணவர்கள் 329
No comments:
Post a Comment