Thursday, February 02, 2012

நான் சிம்புவோட தீவிர ரசிகை: தீக்ஷா சேத்







டங்க் ஸ்லிப்பாகுற நேரத்தில்கூட சிம்புவை பற்றி நல்ல வார்த்தை நாலு வராது என்கிறளவுக்கு எஸ்டிஆரின் கேரக்டரை குதறி வைக்கிறது கோடம்பாக்கம். அதுவும் அவருடன் நடிக்க யார் ஒப்பந்தம் ஆனாலும்,
அந்த தம்பி கூடவாம்மா நடிக்கிறே? பண்டம் பாத்திரமெல்லாம் பத்திரம் என்கிற அளவுக்கு மிரட்டி வைக்கிறார்கள். விக்ரமுடன் 'ராஜபாட்டை'யில் ஜோடி சேர்ந்த தீக்ஷா சேத்துக்கும் அப்படி ஒரு அனுபவம் கிட்டியது. நடிக்க வந்த நாலே நாளில் இவரை சந்தித்த ஒரு மேனேஜர், யாருக்கு வேணும்னாலும் கால்ஷீட் கொடுங்க. ஆனால் அந்த சிம்புவை மட்டும் கிட்ட சேர்த்துராதீங்க. அப்புறம் உங்க எதிர்காலமே கோவிந்தாதான் என்று போட்டுக் கொடுக்க, அட! போப்பா. நான் அவரோட தீவிர ரசிகை தெரியுமா என்றாராம் தீக்ஷா சேத். யார் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். சிம்பு என்னிடம் கால்ஷீட் கேட்டால் அடுத்த வினாடியே கொடுப்பேன் என்று அவர் உற்சாகமாக சொன்ன செய்தி காற்று வாக்கில் சிம்புவின் காதுகளுக்கும் போனது. விளைவு? தன்னுடைய 'வேட்டை மன்னன்' படத்தில் தீக்ஷாதான் வேண்டும் என்று அடம் பிடித்து கமிட் பண்ணினாராம்

No comments:

Post a Comment