Thursday, February 02, 2012

சமுத்திரக்கனி இயக்கத்தில் 'ஜெயம்' ரவி!





டைரக்டர் சசிகுமாரின் 'சுப்ரமணியபுரம்' படம் மூலம் தன்னை ஒரு நல்ல நடிகராகவும், 'நாடோடிகள்' மற்றும் 'போராளி' படம் மூலம் தன்னை ஒரு இயக்குநராகவும் வெளிகாட்டிய சமுத்திரக்கனி, அடுத்து 'ஜெயம்' ரவியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.
'ஜெயம்' ரவி இப்போது அமீரின் 'ஆதிபகவன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. ஆனால் இன்னும் முடிந்தபாடில்லை. இருந்தாலும் அவரை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துவிட்டார். 'ஜெயம்' ரவியும் இதற்கு ஓ.கே. சொல்லிவிட்டார். 'நான் கடவுள்', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படங்களை தயாரித்த வாசன் விஷுவல் வென்ட்ஜர்ஸ் நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது.
சமுதாயத்தில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கி வருகிறாராம் சமுத்திரக்கனி. இந்த படம் சமுத்திரக்கனிக்கும், 'ஜெயம்' ரவிக்கும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக அமையும் என்றும், இதுவரை பார்த்திராத ஒரு 'ஜெயம்' ரவியை இந்த படத்தில் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது சமுத்திரக்கனி 'சாட்டை' எனும் படத்தில் பள்ளி ஆசிரியராக நடித்து வருகிறார். இப்படம் முடியும் தருவாயில் உள்ளது. இதற்கு பிறகு 'போராளி' படத்தை கன்னடத்தில், புனித் ராஜ்குமாரை வைத்து ரீ-மேக் செய்கிறார். அப்படியே தமிழில் 'ஜெயம்' ரவி படத்தையும் இயக்கும் திட்டத்தில் இருக்கிறார்.

No comments:

Post a Comment