பிரபு தேவாவும் நயன்தாராவும் பிரிந்து விட்டார்கள் என்னும் தகவல்களைத் தொடர்ந்து, இப்போது நயன் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படுவதாக செய்திகள் வலம் வருகின்றன. நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப் படம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'. அப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. ஆனாலும்
நயன் அதன் பிறகு எந்த தமிழ் படங்களிலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. ஏற்கனவே ஒப்புக் கொண்டு அவர் சீதையாக நடித்த தெலுங்கு படம் ஸ்ரீராமராஜ்ஜியத்திற்குப் பிறகு, எந்த மொழியிலும் படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார். இப்போது விஷ்ணுவர்தன் இயக்க இருக்கும் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை அணுகியிருக்கிறார்கள். விஷ்ணுவர்தனும் "நயன்தாராவுடன் பேசியிருக்கிறோம்.. ஆனால் இன்னும் எதுவும் முடிவாகவில்லை" என தெரிவித்திருக்கிறார். 'பில்லா" படத்தில் நயன் தோற்றமும் நடிப்பும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. எனவே, இப்படத்திலும் அவர் நடிக்கக்கூடும் என்கிறது படக்குழு. நயன் தெலுங்கில் நாகார்ஜுன் ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். சம்பளமாக 1.25 கோடி பேசப்பட்டிருக்கிறதாம். தலகூட நடிக்கணும்னா என்ன கசக்கவா செய்யும்?
No comments:
Post a Comment