Monday, February 27, 2012

சாப்ட்வேர், பிபீஓ நிறுவனங்கள் கிராமங்களுக்கு படையெடுப்பு

 சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள போட்டி காரணமாக சாப்ட்வேர் மற்றும் பிபீஓ நிறுவனங்கள் தங்கள் கவனத்தை முக்கிய நகரங்களில் இருந்து கிராமப்புறங்களுக்கு திருப்பியுள்ளன. பிபீஓ பணிகள், நிறுவனங்களின் நிலைப்பாடு பற்றி, ‘மறுஆய்வு உக்தி 2011’ என்ற தலைப்பில் நாஸ்காம் ஆய்வு நடத்தியது. அதன் விவரம்: 


உலக நாடுகள் சில நிதி நெருக்கடியில் சிக்கி வரும் நிலையில் குறைந்த தொகை க்கு அவுட்சோர்சிங் பணிகளை செய்து கொடுக்கும் பிலிப்பைன்ஸ், எகிப்து போன்ற நாடுகளில் அவுட்சோர்சிங் ஆர்டர்கள் குவிகின்றன. அதனால், இப்பணியில் முக்கிய இடம் வகிக்கும் இந்தியா மாற்று வழியை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. அதற்காக மனிதவளத்துடன் கட்டமைப்பு பணி களுக்கு குறைந்த செலவா கும் 3ம் தர நகரங்கள் மற்றும் கிராம பகுதிகளில் பிபீஓ மையங்களை அமை க்க நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. 

திறமையான கிராமப்புற இளைஞர்களை பயன்படுத்தி, வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் பர்ஸ்ட்சோர்ஸ்,ரூரல்ஷோர் நிறுவனங்கள் இணைந்து மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா கிராமத்தில் கால் சென்டர் அமைத்துள்ளன. இதை தொடர்ந்து விப்ரோ, எச்டிஎப்சி, டாடா குரூப் போன்ற நிறுவனங்கள் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் என்ஜிஓ அமைப்புகளுடன் இணைந்து, சிறு நகரங்களில் பிபீஓ மையங்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேலும், கிராமங்களில் வேலை வாய்ப்பை பெருக்கும் வகையில் கால்சென்டர் அமைக்கும் நிறுவனங்களுக்கு நிலங்கள், கட்டுமானத்திற்கு சலுகைகள் வழங்குவதுடன் மாநில அரசுகள் மானியமும் வழங்க வேண்டும் என்று நாஸ்காம் வலியுறுத்தியுள்ளது
.

No comments:

Post a Comment