பஜாஜ் அலையன்ஸ் பொதுக் காப்பீட்டு நிறுவனம் பெண்களுக்கென பிரத்யேகமாக காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு ஏற்படும் 8 பிரதான நோய்களுக்கு சிகிச்சை பெறும் வகையில் இந்த காப்பீட்டுத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காப்பீட்டுத் திட்டம் அமலில் இருக்கும்போது நோய் கண்டறியப்பட்டால் அதற்குரிய சிகிச்சைக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும்.
மார்பக புற்று நோய், தீப்புண், பக்கவாதம், அவசர கால சிகிச்சை உள்ளிட்ட 8 வகையான நோய்களுக்கு சிகிச்சை பெறலாம்.
இந்த திட்டத்தில் 25 வயது முதல் 55 வயது வரையிலானவர்கள் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.
ஆண்டு காப்பீடு ரூ. 250 முதல் ரூ. 5,500 வரை வயதுக்கேற்ப அமையும்.
No comments:
Post a Comment