சிறு முதலீட்டாளர்களுக்கு பங்கு வர்த்தகம் குறித்து, டி.வி, ரேடியோ மற்றும் பத்திரிகைகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தனியார் ஏஜென்சியை நியமிக்க பங்கு பரிவர்த்தனை வாரியம்(செபி) திட்டமிட்டுள்ளது.
பங்கு சந்தையில் பெரும் தொழிலதிபர்கள் மற்றும் புரோக்கர்கள் மூலம் தினம் தினம் ஏராளமான பங்கு பரிவர்த்தனைகள் நடந்தாலும், சிறு முதலீட்டாளர்களும் இதில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, சம்பளதாரர்கள் கூட சிறிய அளவில் முதலீடு செய்து,
பங்குகள் வாங்கி விற்கின்றனர். அவர்களுக்கு பங்கு வர்த்தகத்தில் அதிக ஞானம் இருப்பதில்லை. அவர்கள் உள்பட அனைத்து முதலீட்டாளர்களுக்கும் பங்கு வர்த்தகம் குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று செபி கருதுகிறது. இதற்காக ஒரு தனியார் ஏஜென்சியை நியமிக்க முடிவெடுத்து, விருப்பம் உள்ள ஏஜென்சிகளிடம் விண்ணப்பம் கோரியுள்ளது. விண்ணப்பிக்கும் ஏஜென்சி, கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ரூ.100 கோடி ஆண்டு வருவாயை பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறும்படங்கள் மற்றும் டி.வி, ரேடியோ, பத்திரிகைகளில் விளம்பரங்கள் ஆகியவற்றின் மூலம் பங்கு வர்த்தகம் குறித்து முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே நோக்கம் என்றும், இது தொடர்பாக தேர்ந்தெடுக்கப்படும் ஏஜென்சிக்கு உரிய விதிமுறைகள் வகுக்கப்படும் என்றும் செபி கூறியுள்ளது.

No comments:
Post a Comment