
டைரக்டர் செல்வன் சென்ற கார், பாண்டிச்சேரி அருகே விபத்துக்குள்ளானதில், அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜீவனை வைத்து 'கிருஷ்ணலீலை' என்ற படத்தை இயக்கியவர் செல்வன். இயக்குநர் சிகரம் பாலசந்தர் தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து வருஷங்கள் ஆகியும் இன்னும் ரிலீசாகவில்லை. இந்நிலையில் தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்க பாண்டிச்சேரிக்கு காரில் சென்றார் செல்வன். அவருடன் இன்னும் 2 பேர் சென்றுள்ளனர். பாண்டிச்சேரி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுபாட்டை இழந்த கார், அருகில் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் செல்வன் உள்ளிட்ட மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து செல்வன் மற்றும் அவருடன் வந்த இருவரும் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மூவரும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தலை மற்றும் மார்பு பகுதியில் செல்வனுக்கு பலத்த அடிபட்டதால் அவரது நிலைமை மேலும் மோசமாக இருப்பதாகவும், அவர் கோமா நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment