Friday, February 03, 2012

சூர்யா ஒரு உடல் இரண்டு தலையுடன் நடிக்கிறாரா?













7ஆம் அறிவு' படத்தினைத் தொடர்ந்து சூர்யா நீண்ட நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி நடித்து வரும் படம் 'மாற்றான்'. 'அயன்' படத்திற்குப் பிறகு இப்படத்தில் இணைகிறது
கே.வி.ஆனந்த், சூர்யா, ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி. நாயகியாக காஜல் அகர்வால், இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தினை மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இப்படத்தின் சூர்யா ஒரு உடலில் இரு தலை உடையவராக நடித்து வருவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அத்தகவலை மறுத்தார் கே.வி.ஆனந்த். ஆனால், இப்படத்தில் சூர்யாவின் தோற்றமும் பாத்திர படைப்பும் நிச்சயமாக தமிழ் சினிமாவிற்கு புதிது என்று அறிவித்தது படக்குழு. 'மாற்றான்' படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்காக சூர்யா - கே.வி.ஆனந்த் இருவரும் அமெரிக்கா செல்ல இருக்கிறார்கள். உலக அளவில் வரவேற்பைப் பெற்ற ஆங்கிலப் படங்களான AVATAR, JURASSIC PARK, TERMINATOR மற்றும் தமிழில் 'எந்திரன்' உள்ளிட்ட படங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்த STAN WINSTON STUDIOS இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாம். அமெரிக்காவில் இருக்கும் அந்த ஸ்டுடியோவுக்கு சென்று, 'மாற்றான்' படத்தில் சூர்யாவின் ஒரு பாத்திரத்திற்கு எப்படி கிராபிக்ஸ் செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்க இருக்கிறார்களாம்...




No comments:

Post a Comment