புதுடெல்லி : ரூபாய் நோட்டுகளை 100 நோட்டுகள் கொண்ட புதிய கட்டுகளாக ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. இந்த புதிய கட்டுகளில் ரூபாய் வரிசை எண் தொடர்ச்சியாக இருக்கும். ஆனால்,வரிசை எண்கள் மாறி, மாறி இருக்கும் வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் முதல்முறையாக 500 ரூபாய் கட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
அதுபோல 1000 ரூபாய் நோட்டு கட்டுகளை விரைவில் வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல பின் அடிக்காமல் ரூபாய் நோட்டு கட்டுகள் ரப்பர் பேண்ட் போடப்பட்டிருக்கும். அவற்றின் மீது ‘100 நோட்டுகள் கொண்ட, வரிசை எண் தொடர்ச்சியற்ற ரூபாய் நோட்டு கட்டு’ என்று அச்சிடப்பட்டிருக்கும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. வரிசை எண்ணுடன் அசல் நோட்டுகளை போல கள்ள நோட்டுகள் வெளியாவதால், அதை தடுக்க வரிசை எண்கள் கலைந்த நிலையில் ரூபாய் நோட்டு கட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிடுவதாக தெரிகிறது.
No comments:
Post a Comment