Sunday, January 22, 2012

லாராதத்தா - மகேஷ்பூபதி தம்பதியருக்கு பெண் குழந்தை



மும்பை, ஜன. 22 - லாராதத்தா, மகேஷ்பூபதி தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. நடிகையும், முன்னாள் உலக அழகியுமான லாரா தத்தா, பிரபல டென்னிஸ் வீரர் மகேஷ்பூபதியை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த லாராதத்தா
, கடந்த திங்களன்று மும்பை பரமேஸ்வர் கோத்ரெஜ் வீட்டில் நடந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நேற்று முன்தினம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பை ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டார். பிற்பகலில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதை கேள்விப்பட்ட மகேஷ்பூபதி மகிழ்ச்சியடைந்தார். தனக்கு பெண் குழந்தை பிறந்த தகவலை அவர் இணையதளத்தில் வெளியிட்டார். தாயும், சேயும் நலமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment