Sunday, January 22, 2012

திருப்பதி ஏழுமலையானை படம் பிடித்த தந்தை மகன்கைது




நகரி, ஜன.- 23 - திருப்பதி  சன்னிதானத்தில் உள்ள மூலவரை புகைப்படம் பிடித்த தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்ட்ராவைச் சேர்ந்தவர் ராகுல். இவர் தனது குடும்பத்துடன் திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது
அவரது மகன் தனது செல்போனில் திருப்பதி கோவில் கருவறையில் உள்ள மூலவரை படம் பிடித்தான்.  அதனைக் கண்ட உளவுத்துறை அதிகாரிகளும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் ராகுலையும், அவரது மகனையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டுசென்றனர். அப்போது அவர்கள் படம் கருவறையில் படம் பிடிக்க கூடாது என்பது எங்களுக்கு தெரியாது என்று கூறினார்கள். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். திருப்பதி கோவிலுக்குள் பக்தர்கள் செல்போனை கொண்டுசெல்லக் கூடாது என்று பல இடங்களில் போலீசார் பரிசோதனை செய்து அனுப்புகின்றனர். இருந்தபோதிலும் ராகுலின் மகன் அப்பரிசோதனைகளையும் மீறி செல்போனை கோவிலுக்குள் கொண்டு சென்றுள்ளான். இது போலீசாரின் பாதுகாப்பு குறைபாட்டையே காட்டுகிறது. இது தொடர்பாக சோதனை போடும் இடங்களில் உள்ள போலீசார் மற்றும் அதிகாரிகளிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment