
டேப்லெட் துறையில் ஆர்க்கோஸ் நிறுவனம் மிக பிரபலமான ஒன்றாக
இல்லாவிட்டாலும் அந்நிறுவனம் சமீபத்தில் சில தரமான டேப்லெட்டுகளை களமிறக்கி இருக்கிறது. அந்நிறுவனத்தின்
டேப்லெட்டுகளின் முக்கிய அம்சம் என்னவென்றால் பலரும் வாங்கக்கூடிய வகையில் அவை குறைந்த விலையில் இருக்கும். சமீபத்தில் அந்நிறுவனம் ஆர்க்கோஸ் 80 ஜி9 மற்றும் ஆர்க்கோஸ் 101 ஜி9 என்ற இரண்டு டேப்லெட்டுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த டேப்லெட்டுகளில் ஆர்க்கோஸ் ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தை இண்டக்ரேட் செய்திருக்கிறது. ஐஸ் க்ரீம் இயங்கு தளத்தில் இயங்கிய ஜி9 டேப்லெட்டுகளை லாஸ் வேகாஸ் கண்காட்சியில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. மேலும் ஐஸ் க்ரீம் இயங்கு தளம் அப்டேட் செய்யப்பட்டு வரும் பிப்ரவரியில் இந்த டேப்லெட்டுகள் சந்தைக்கு வரும் என்று ஆர்க்கோசின் அலுவலகர்கள் தெரிவிக்கின்றனர். ஜி9 டேப்லெட்டின் டிஸ்ப்ளே யூனிட் கண்காட்சியில் ஆன்ட்ராய்டு 4.0.1 இயங்கு தளத்தில் இயங்கியது. ஆனால் இது சந்தைக்கு வரும் போது ஆன்ட்ராய்டு 4.0.3. இயங்கு தளத்தில் இயங்கும்.
ஆர்க்கோஸ் 101 ஜி9 டேப்லெட் ஒரு மீடியா சார்ந்த டிவைஸ் ஆகும். அதனால் இதில் இசை, வீடியோ மற்றும் கேம்கள் போன்ற வசதிகள் அம்சமாக இருக்கும். தற்போது இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 3.2 ஹன்கோம் இயங்கு தளத்தில் இயங்குகிறது. அதுபோல் இந்த டேப்லெட் 1 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகம் கொண்ட ஒஎம்எபி 4 டூவல் கோர் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. இதன் இணைப்பு வசதிகளைப் பார்த்தால் யுஎஸ்பி போர்ட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் ஒரு மினி எச்டிஎம்ஐ போர்ட் ஆகிய இணைப்பு வசதிகளை இந்த டேப்லெட் தன்னுள்ளே கொண்டிருக்கிறது.
இதன் திரை 10.1 இன்ச் அளவு கொண்டு 1280 x 800 பிக்சல் ரிசலூசனை வழங்கக்கூடிய கப்பாசிட்டிவ் தொடு வசதியை வழங்குகிறது. மேலும் இந்த கப்பாசிட்டிவ் தொடுதிரை மிகவும் சென்சிட்டிவிட்டி கொண்டது ஆகும். இந்த ஆர்க்கோஸ் 101 ஜி9 டேப்லெட்டின் விலை ரூ.20,000 ஆகும்.
அடுத்ததாக ஆர்க்கோஸ் 80 ஜி9 டேப்லெட் 8 இன்ச் திரையைக் கொண்டிருக்கிறது. மேலும் இது ஒரு அடக்கமான மற்றும் எடை குறைந்த டேப்லெட் ஆகும். மேலும் இதன் திரை 1024 x 768 பிக்சல் ரிசலூசனை வழங்கி மிகவும் பளிச்சென்று இருக்கிறது. இது 1 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகம் கொண்ட ஒஎம்எபி 4 சோக் ப்ராசஸரைக் கொண்டுள்ளது. மேலும் இதில் ஒரு கேமரா மட்டுமே உள்ளது. இந்த கேமரா மூலம் தரமான படங்களை எடுக்க முடியும். மேலும் சூப்பராக வீடியோ சேட்டிங் செய்ய முடியும். அதுபோல் இந்த டேப்லெட் ஏராளமான ப்ரிலோடட் அப்ளிகேசன்களுடன் வருகிறது. இந்த 80 ஜி9 டேப்லெட்டின் விலை ரூ.15,000 ஆகும்.
No comments:
Post a Comment