Saturday, January 14, 2012

20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!…

Saudi Man and His Son Image in Facebook
பேஸ்புக்கில் இருக்கும் சில விஷயங்கள் படிப்பவர்களை மிகவும் பிரம்மிக்க வைக்கிறது. சவுதி அரேபியாவை சேர்ந்த சவுத் பின் நாசர் அல் ஷாஹ்ரி என்பவர் பேஸ்புக்கில் தனது மகனை விற்க விளம்பரப்படுத்தி இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.
 உலக அளவில் உள்ள தொழில் நுட்பங்களில் கூட பண நெருக்கடி விளையாடுகிறது. அப்படி பண நெருக்கடி ஏற்பட்டதால் இவர் தனது மகனை விற்க முடிவெடுத்தாக கூறி இருக்கிறார்.
இவரது மகனின் விலை 73 மில்லியன் யூஏஇ திறாம்ஸ் (20 மில்லியன் டாலர்) என்று ஃபேஸ்புக்கில் கூறி இருக்கிறார். இது போன்று திகைக்க வைக்கும் சில விஷயங்கள் ஃபேஸ்புக்கில் வெளியாகின்றன.
ஏழ்மை நிலையில் இருப்பவர்கள், தனது சொந்த வாழ்கை பற்றி பகிர்ந்து கொள்ள நினைப்பவர்கள் என்று ஃபேஸ்புக்கில் வெளியாகும் செய்திகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். வீடு இல்லாத ஒரு பெண் மணி தனது வாழ்க்கை சூழலை பகிர்ந்து கொண்டதன் விளைவாக அவருக்கு ஃபேஸ்புக் ஃபாலோவர்கள் மூலம் நிறைய உதவிகள் கிடைத்தது. இந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா மனிதர் தனது மகனை விற்க தயாராக இருக்கும் இந்த செய்தி, படிப்பவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும்.
இப்படி சோஷியல் மீடியாவின் பயன்பாடு தினம் தினம் வித்தியாசப்படுகிறது. மக்கள் இதன் மூலம் நிறைய பயனடைவார்கள் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment