பாரதிராஜா இயக்கத்தில் பாபு, ரமா நடித்த ‘என் உயிர்த் தோழன்’ படம் 90ல் ரிலீசானது. இதில் இளையராஜா இசையில் அனைத்து பாடல்களையும் கங்கை அமரன் எழுதினார். இதையடுத்து 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பாரதிராஜா படத்துக்கு பாட்டு எழுதியுள்ளார்.
இயக்குனர் அமீர், இனியா, கார்த்திகா நடிக்கும் ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்தை இயக்கி வருகிறார் பாரதிராஜா. இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவரது இசையில் வைரமுத்து, கங்கை அமரன் பாடல்கள் எழுதியுள்ளனர். இதுகுறித்து கேட்டபோது, ‘21 வருடங்களுக்குப் பிறகு பாரதிராஜா படத்துக்கு பாடல் எழுதியது சந்தோஷமான அனுபவம்’ என்றார், கங்கை அமரன்.
No comments:
Post a Comment