வெயில் காலங்களில் கிடைத்திடும் ஒப்பற்ற மருத்துவக் குணமும்,இனிப்பும்,சுவையும் கொண்ட எல்லோரும் விரும்பும் பழம் மாதுளை.மேல் தோல் கடினமாக இருக்கும்.உள் தோல் வெண்மையாக இருக்கும்.முத்துக்களாக உள்ள பழம்.சிவப்பாக இருக்கும்.பழங்களின் இராணி என்றும் போற்றப்படுகிறது
.இரத்தத்துடன் நேரடியாகக் கலக்கும் இரும்புத் தாதும்,சர்க்கரையும் மிகுந்த பழம்.
- மாதுளை
மாதுளை பழத்தில் உள்ள சத்துக்கள்:
- நீர்=78%
- மாவுப்பொருள்=15%
- புரதம்=1.7%
- கொழுப்பு=0.1%
- கால்சியம்=0.01%
- பாஸ்பரஸ்=0.07%
- இரும்புத்தாது=0.03 யூனிட்
- வைட்டமின் C=16 யூனிட்
- வைட்டமின் B2=10 யூனிட்

இவை அனைத்தும் 100 கிராம் மாதுளை பழச்சாறில் உள்ள சத்துக்கள்.
மருத்துவக் குணங்கள்:
- மாதுளையில் எளிதில் ஜீரணிக்கும் சத்தும்,சர்க்கரையும் மிகுந்து உள்ளதால் பிணியாளர்கள்,குழந்தைகள் நல்ல பலன் பெறுவர்.வயிற்றுப் புண்,வயிற்று வலி,வயிற்று உளைச்சல்,ஜீரணக் கோளாறு,பசியின்மை போன்றவற்றை நீக்கும் உணவுச்சாறு.
- மனதிற்கும்,உடலுக்கும் பூரிப்பும்,மகிழ்ச்சியும்,புத்துணர்வும் தரும் சாறு.
- குளிர்ச்சியான பானம்,உடல் சூடு,மூலம்,கருப்பை சார்ந்த பிணிகள் நீங்கும்.இதயம் வலிமை அடையும்.
- ஹீமோகுளோபினைக் கூட்டும் உயர்ந்த சாறு.
- வயிறு உப்புசம்,காய்ச்சல்,மலேரியா,அம்மை கண்ட காலத்தில் இது நல்ல மருந்தாக உள்ளது.
No comments:
Post a Comment