Sunday, January 22, 2012

நேரம் வரும். அப்போது திருமணம் செய்வேன்.காஜல் அகர்வால்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news



‘திருமணம் செய்துகொள்ளும் நிலையில் நான் இல்லை’ என்றார், காஜல் அகர்வால். மேலும் அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு நான் நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடியது. சில படங்கள் தோல்வி அடைந்தது. நான் நடிக்கும் எல்லா படமும் வெற்றிபெறும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. அப்படி
எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். தெலுங்கு படத்தில் மகேஷ்பாபுவுடன் முத்தக்காட்சியில் நடித்தது பற்றி கேட்கிறார்கள். இக்காட்சியை ஆபாசம் இல்லாமல் பூரி ஜெகன்நாத் இயக்கினார். ரசிகர்களும் அதை ஏற்றுக்கொண்டனர். முத்தக்காட்சியை தவிர எத்தனையோ காட்சிகள் படத்தில் இருக்கிறது. அதுபற்றிக் கேட்காமல், முத்தம் பற்றியே கேட்பது ஏன்? கதைக்கு அவசியம் என்பதால்தான் அப்படி நடித்தேன். நான் ‘நிர்வாண போஸ்’ கொடுத்ததாக வந்த செய்திக்கு, தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்கிறார்கள். இதை நான் பலமாக மறுத்திருக்கிறேன். பொய்யான அச்செய்திக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து, விஷயத்தைப் பெரிதாக்க விரும்பவில்லை. அதனால் அமைதியாகி விட்டேன். இந்தியில் ‘சிங்கம்Õ ரிலீசுக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வருவதால் ஏற்க முடியவில்லை. தெலுங்கு ஹீரோ பிரபாசுடன் எனக்கு காதல் என்று எழுதுகிறார்கள். திருமணம் ஆகாதவர்கள் இரண்டு பேர் பழகினால், உடனே அவர்கள் காதலிக்கிறார்கள் என்று அர்த்தமா? அவர் எனக்கு நல்ல நண்பர், அவ்வளவுதான். தற்போது திருமணம் செய்துகொள்ளும் நிலையில் நான் இல்லை. அதற்கான நேரம் வரும். அப்போது திருமணம் செய்வேன்.

No comments:

Post a Comment