Sunday, January 29, 2012

11% உயர்ந்தது இந்திய பங்கு சந்தை. இந்த வாரம் சரிய வாய்ப்பு

புதுடெல்லி: ஜனவரியில் மட்டும் 11 சதவீதம் உயர்ந்த இந்திய பங்குச் சந்தைகள், இந்த வாரத்தில் சரியும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டில் கடுமையான சரிவை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள், இந்த ஆண்டில் நல்ல தொடக்கத்தைக் கொடுத்துள்ளது.
இந்த மாதத்தில் 4 வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதுவரை சென்செக்ஸ் 1,716 புள்ளிகள் உயர்ந்துள்ளது. பணவீக்கம், ரூபாய் மதிப்பு ஆகியவை குறைந்து வருவதும், கடன் வட்டி குறையும் என்ற எதிர்பார்ப்புமே இதற்கு முக்கிய காரணம். குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்தனர். இந்நிலையில், இந்த வாரம் லாபத்தை எடுப்பதற்காக முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்க முன்வர வாய்ப்புள்ளதால், பங்குச் சந்தைகள் சரியும் என பங்கு வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 'இந்திய பங்குச் சந்தைகள் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து உயர்ந்ததால், 5 சதவீதம் வரை சரிய வாய்ப்பு உள்ளது. எனினும், இது லாபத்தை எடுப்பதற்கான தற்காலிக நிலையாகவே இருக்கும்' என சிஎன்ஐ ரிசர்ச் தலைவர் கிஷோர் ஆஸ்வால் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment