புதுடெல்லி: வருங்கால வைப்பு நிதி(பி.எப்) செலுத்தும் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் ரூ.1000 என நிர்ணயிக்க பி.எப். வாரியம் பரிசீலித்து வருகிறது.
தனியார் துறை ஊழியர்களிடம் மாதச் சம்பளத்தில் பி.எப். சந்தா பிடிக்கப்படுகிறது. இதில் ஒரு தொகையை ஓய்வூதியத்திற்கென பி.எப். வாரியம் ஒதுக்குகிறது. அந்த ஊழியர்கள் ஓய்வு பெறும் போது, அவர்களின் ஓய்வூதிய நிதி சேமிப்புக்கு ஏற்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 4.71 கோடி பேர் பி.எப். சந்தாதாரர்களாக உள்ளனர். பி.எப். நிதியில் கிட்டத்தட்ட 3.5 லட்சம் கோடி உள்ளது.
இந்த தொகையில் 35 லட்சம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். அவர்களில் 7 லட்சம் பேர் மாத ஓய்வூதியமாக ரூ.1000 பெறுகின்றனர். 14 லட்சம் பேர் வெறும் 500 ரூபாய் மட்டுமே மாத ஓய்வூதியமாக பெறுகின்றனர். இன்னும் சிலர் ரூ.12 முதல் ரூ.38 வரை மட்டுமே பெறுகின்றனர். இன்றைய விலைவாசி நிலைமையில், இந்த ஓய்வூதியம் மிகவும் நகைப்புக்குரியதாக உள்ளது. எனவே, இதை குறைந்தபட்சம் ரூ.1000 என நிர்ணயிக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரி வருகின்றன.
இது பற்றி கடந்த டிசம்பரில் நடந்த வாரியக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது எந்த முடிவும் எடுக்காமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, பிப்ரவரி 22ம் தேதி நடைபெறும் வாரியக் கூட்டத்தில் இது பற்றி பரிசீலிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.1000 என நிர்ணயித்தால், கூடுதல் தொகையை அரசு மானியமாக தர வேண்டும் என்றும், அதற்காக பி.எப். சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment