Wednesday, December 28, 2011

பங்குச் சந்தை ஆலோசகர்களுக்கு:"செபி' கிடுக்கிப் பிடி






மும்பை:"செபி' யின் அங்கீகாரம் பெற்ற அமைப்பில் பதிவு செய்து கொண்டவர்கள் மட்டுமே, இனி பங்கு முதலீடு சார்ந்த ஆலோசனைகளை

 வழங்க முடியும்.

 இந்த நடைமுறையை "செபி' விரைவில் கொண்டு வர, உள்ளது.பங்குச் சந்தை உள்ளிட்ட பலதரப்பட்ட நிதி சார்ந்த ஆலோசனைகளை ஏராளமானோர் வழங்கி வருகின்றனர். ஊடகங்களில் வெளியாகும் இத்தகைய ஆலோசனைகளின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு ஐயப்பாடு எழுந்துள்ளது.




இதையடுத்து, பங்குகள், நிதிச் சந்தை சார்ந்த முதலீடுகள் குறித்து ஆலோசனை வழங்குவோருக்கான நெறிமுறைகளை "செபி' வகுத்துள்ளது. இதன்படி, "செபி'யின் அங்கீகாரம் பெற்ற, சுய ஒழுங்குமுறை அமைப்பில்(எஸ்.ஆர்.ஓ) பதிவு பெற்றவர்கள் மட்டுமே, முதலீடு தொடர்பான ஆலோசனைகளை பொதுமக்களுக்கு வழங்க முடியும். மேலும், பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகர்களின் பிரதிநிதிகளும் நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்கலாம்.இந்த நடைமுறை அமலுக்கு வரும் பட்சத்தில், தவறான வழிகாட்டுதலின் பேரில், பாதிப்பிற்குள்ளாகும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment