Wednesday, December 28, 2011

மக்கள் பாராட்டும் மனிதர்களில் ஒபாமா, ஹில்லரி முதலிடம்


வாஷிங்டன் : அமெரிக்கர்களால் அதிகமாக பாராட்டப்படும் ஆண்களில் ஒபாமாவும், பெண்களில் ஹில்லரி கிளிண்டனும் முதலிடம் பிடித்துள்ளனர்

 என்று அமெரிக்க நிறுவனம் கணித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ‘காலூப் போல்’ என்ற நிறுவனம், யுஎஸ்ஏ டுடே என்ற பத்திரிகையுடன் இணைந்து சமீபத்தில் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது.
உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்களால் அதிகமாக பாராட்டப்படும் ஆண்கள் மற்றும் பெண்கள் பற்றி கணிப்பு நடத்தப்பட்டது. இதில், ஆண்கள் வரிசையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பெண்கள் வரிசையில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளிண்டனும் முதலிடம் பிடித்துள்ளனர்.

ஹில்லரி கடந்த 10 ஆண்டுகளாக இதே போல் முதலிடம் பிடித்து வருகிறார். ஒபாமா கடந்த 4 ஆண்டுகளாக முதலிடம் பிடித்துள்ளார். ஒபாமாவுக்கு அடுத்து கிளிண்டன், ஜார்ஜ் புஷ், நியூட் ஜிங்ரிச் மற்றும் தொழிலதிபர்கள் பபெட், டொனால்டு டிரம்ப், பில்கேட்ஸ், மத தலைவர்கள் போப் பெனடிக், தாமஸ் மோன்சன் ஆகியோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பெண்கள் வரிசையில் ஹில்லரிக்கு அடுத்து அரசு பணியில் உள்ள 7 பேர் மற்றும் தொலைக்காட்சி பணியில் உள்ள 2 பேர் இடம்பிடித்துள்ளனர் என்று காலூப் போல் நிறுவனம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment