Wednesday, December 28, 2011

பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவுக்கு 5வது இடம்


வரும் 2020ம் ஆண்டில், உலக அளவில் மிகப் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் நம் நாடு 5வது இடம் பிடிக்கும் என்று

 பொருளாதார மற்றும் ஆராய்ச்சி மையம் (சிஇபிஆர்) தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் தற்போது நிலவும் நிதி நெருக்கடிக்கு இடையில் நாடுகளின் பொருளாதார நிலை குறித்த புதிய உலக பொருளாதார லீக் அட்டவணையை சிஇபிஆர் வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஆண்டு (2011) மற்றும் 2020ம் ஆண்டு வாக்கில் மிகப் பெரிய பொருளாதார நாடுகளாக விளங்கும் முன்னணி 10 நாடுகளை பட்டியலிட்டது. அதன் விவரம்:

மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் இந்த ஆண்டு 10வது இடத்தில் உள்ள இந்தியா, திட்டமிட்ட வேகமான வளர்ச்சியின் பயனாக 2020ல் 5வது இடத்தை பிடிக்கும். அப்போது அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா முதல் 4 இடங்களில் இருக்கும். இந்தியாவை தொடர்ந்து பிரேசில், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி ஆகியவை டாப் 10ல் இடம் பெறும். இந்த ஆண்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.

கிழக்கு நாடுகள் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியை மட்டும் எட்டாமல், அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி, உணவு மற்றும் எரிசக்தியிலும் தன்னிறைவு பெறும் என்று சிஇபிஆர் தலைவர் டக்லஸ் மெக்வில்லியம்ஸ் தெரிவித்தார். உலக வங்கியின் புள்ளிவிவரப்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அடிப்படையில் ஸி91.69 லட்சம் கோடியுடன் கடந்த 2010 டாப் 10 பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 9வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment