Friday, January 20, 2012

பஞ்சபட்சி சாஸ்திரம் என்றால் என்ன? விளக்கம்



14 நாட்களுக்கு ஒருமுறை அமாவாசை அல்லது பவுர்ணமி வருகிறது.இந்த இருநாட்களிலும் சூரியனும் சந்திரனும் முழுவலிமையடைகின்றன.இந்து ஜோதிடப்படி சூரியன் ஆத்மாக்காரகன் எனவும் சந்திரன் மனக்காரகன் எனவும் அழைக்கப்படுகிறது.

பூமியில் பிறக்கும் மனிதன் 14 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் பிறக்கிறான்.அது வளர்பிறை பிரதமை என வைத்துக்கொள்வோம்.அவனது பிறந்த நட்சத்திரம் அசுவினி என வைத்துக்கொள்வோம்.அவனது அசுவினி வளர்பிறையில் வருவதால் பஞ்சபட்சி சாஸ்திரப்படி அவனது பட்சி ஆந்தை வருகிறது.
ஆந்தையின் குணம் என்ன?
அது இரவில் மட்டுமே வெளிவரும்.ஆக, அந்த மனிதனுக்கு பட்டம்,பதவி எல்லாமே இரவில்தான் கிடைக்கும்.தனது பட்சி ஆந்தை என அவன் அறிந்தால்,அவன் ஒருவரிடம் உதவி கேட்டுச்செல்ல வேண்டிய நேரம் இரவு மட்டுமே! பகலில் அவன் உதவி கேட்டால் அந்த உதவி கிடைக்காது.
அவனுக்குஒரு மாதத்தில் (தமிழ்மாதத்தில்) வளர்பிறைகாலமான 14 நாட்களில் காரியங்கள் வெற்றியடையும்.அந்த 14 நாளில் ஒரு குறிப்பிட்ட நாள் மட்டும் அவனது பறவை(பட்சி)யான ஆந்தைக்கு மரணபட்சிநாளாக அமைகிறது.அந்த நாளில் அவன் செய்யும் எந்த சுபகாரியமும் படுதோல்வியடையும்.மீதி 13 நாட்களில் ஒவ்வொரு நாளிலும் சுமார் 1 1/2 மணி நேரம் அரசபட்சி நேரமாகிறது.அந்த நேரத்தில் அவன் ஒரு சர்வாதிகாரியை சந்தித்தாலும் காரிய வெற்றி உண்டாகிறது.
இந்த பஞ்சபட்சி நேரத்தைத்தான் இன்றைய அரசியல்வாதிகள் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பயன்படுத்துகிறார்கள்.அவர்களது அரசபட்சிநேரம் பல சமயங்களில் ராகுகாலத்திலோ, எமகண்டத்திலோ யதார்த்தமாக அமைந்துவிடுகிறது.இதைத் தான் அந்த அரசியல்வாதிகள் “நான் ராகு காலத்தில் மனுத்தாக்கல் செய்தேன்” என பகுத்தறிவு பகலவன்கள் போல பீற்றிக் கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், தஞ்சாவூர், மதுரை பகுதியில் வாழும் ஜோதிடர்கள் பஞ்சபட்சி சாஸ்திரத்தில் நிபுணர்களாக இருக்கிறார்கள்.


வல்லூறு,
 ஆந்தை, காகம், கோழி, மயில் எனும் பஞ்சபட்சிகள் 27 நட்சத்திரங்களுக்கு வளர்பிறையில் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படுகின்றன :
அசுபதி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம் - வல்லூறு
திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் - ஆந்தை
உத்ரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் - காகம்
அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம் - கோழி
திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி, உத்ரட்டாதி, ரேவதி – மயில்

வல்லூறு,ஆந்தை, காகம், கோழி, மயில் எனும் பஞ்சபட்சிகள் 27 நட்சத்திரங்களுக்கு தேய்பிறையில் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படுகின்றன :
அசுபதி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம் - மயில்
திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் - கோழி
உத்ரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம் - வல்லூறு
கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவோணம் - காகம்
அவிட்டம்,சதயம்,பூரட்டாதி, உத்ரட்டாதி, ரேவதி - ஆந்தை

ஒவ்வொரு பட்சியும் அரசு, ஊண், நடை, துயில், சாவு எனும் ஐவகைத் தொழில்களை வளர்பிறை, தேய்பிறைகளில் குறிப்பிட்ட கிரமமாக, வாரத்தின் ஏழுநாட்களிலும் குறிப்பிட்ட கால அளவில் நடத்துகின்றன. அவைகள் பின்வருமாறு :
வளர்பிறை
– பகல்

கிழமை பட்சிகள் 6.00 – 8.24 8.24 – 10.48 10.48 – 1.12 1.12 – 3.36 3.36 – 6.00

ஞாயிறு
செவ்வாய்

வல்லூறு ஊண் நடை அரசு துயில் சாவு
ஆந்தை நடை அரசு துயில் சாவு ஊண்
காகம் அரசு துயில் சாவு ஊண் நடை
கோழி துயில் சாவு ஊண் நடை அரசு
மயில் சாவு ஊண் நடை அரசு துயில்

திங்கள்
புதன்

வல்லூறு சாவு ஊண் நடை அரசு துயில்
ஆந்தை ஊண் நடை அரசு துயில் சாவு
காகம் நடை அரசு துயில் சாவு ஊண்
கோழி அரசு துயில் சாவு ஊண் நடை
மயில் துயில் சாவு ஊண் நடை அரசு

வியாழன்
வல்லூறு துயில் சாவு ஊண் நடை அரசு
ஆந்தை சாவு ஊண் நடை அரசு துயில்
காகம் ஊண் நடை அரசு துயில் சாவு
கோழி நடை அரசு துயில் சாவு ஊண்
மயில் அரசு துயில் சாவு ஊண் நடை

வெள்ளி
வல்லூறு அரசு துயில் சாவு ஊண் நடை
ஆந்தை துயில் சாவு ஊண் நடை அரசு
காகம் சாவு ஊண் நடை அரசு துயில்
கோழி ஊண் நடை அரசு துயில் சாவு
மயில் நடை அரசு துயில் சாவு ஊண்

சனி
வல்லூறு நடை அரசு துயில் சாவு ஊண்
ஆந்தை அரசு துயில் சாவு ஊண் நடை
காகம் துயில் சாவு ஊண் நடை அரசு
கோழி சாவு ஊண் நடை அரசு துயில்
மயில் ஊண் நடை அரசு துயில் சாவு

வளர்பிறை
- இரவு

கிழமை பட்சிகள் 6.00 – 8.24 8.24 – 10.48 10.48 – 1.12 1.12 – 3.36 3.36 – 6.00
ஞாயிறு
செவ்வாய்

வல்லூறு சாவு அரசு ஊண் துயில் நடை
ஆந்தை நடை சாவு அரசு ஊண் துயில்
காகம் துயில் நடை சாவு அரசு ஊண்
கோழி ஊண் துயில் நடை சாவு அரசு
மயில் அரசு ஊண் துயில் நடை சாவு

திங்கள்
புதன்
வல்லூறு நடை சாவு அரசு ஊண் துயில்
ஆந்தை துயில் நடை சாவு அரசு ஊண்
காகம் ஊண் துயில் நடை சாவு அரசு
கோழி அரசு ஊண் துயில் நடை சாவு
மயில் சாவு அரசு ஊண் துயில் நடை

வியாழன்
வல்லூறு துயில் நடை சாவு அரசு ஊண்
ஆந்தை ஊண் துயில் நடை சாவு அரசு
காகம் அரசு ஊண் துயில் நடை சாவு
கோழி சாவு அரசு ஊண் துயில் நடை
மயில் நடை சாவு அரசு ஊண் துயில்

வெள்ளி
வல்லூறு ஊண் துயில் நடை சாவு அரசு
ஆந்தை அரசு ஊண் துயில் நடை சாவு
காகம் சாவு அரசு ஊண் துயில் நடை
கோழி நடை சாவு அரசு ஊண் துயில்
மயில் துயில் நடை சாவு அரசு ஊண்

சனி
வல்லூறு அரசு ஊண் துயில் நடை சாவு
ஆந்தை சாவு அரசு ஊண் துயில் நடை
காகம் நடை சாவு அரசு ஊண் துயில்
கோழி துயில் நடை சாவு அரசு ஊண்
மயில் ஊண் துயில் நடை சாவு அரசு

தேய்பிறை
– பகல்
கிழமை பட்சிகள் 6.00 – 8.24 8.24 – 10.48 10.48 – 1.12 1.12 – 3.36 3.36 – 6.00

ஞாயிறு
செவ்வாய்

கோழி ஊண் நடை சாவு துயில் அரசு
வல்லூறு சாவு ஊண் துயில் அரசு நடை
ஆந்தை துயில் சாவு அரசு நடை ஊண்
மயில் அரசு துயில் நடை ஊண் சாவு
காகம் நடை அரசு ஊண் சாவு துயில்

திங்கள்
சனி

கோழி அரசு துயில் நடை ஊண் சாவு
வல்லூறு நடை அரசு ஊண் சாவு துயில்
ஆந்தை ஊண் நடை சாவு துயில் அரசு
மயில் சாவு ஊண் துயில் அரசு நடை
காகம் துயில் சாவு அரசு நடை ஊண்

புதன்
கோழி துயில் சாவு அரசு நடை ஊண்
வல்லூறு அரசு துயில் நடை ஊண் சாவு
ஆந்தை நடை அரசு ஊண் சாவு துயில்
மயில் ஊண் நடை சாவு துயில் அரசு
காகம் சாவு ஊண் துயில் அரசு நடை

வியாழன்
கோழி நடை அரசு ஊண் சாவு துயில்
வல்லூறு ஊண் நடை சாவு துயில் அரசு
ஆந்தை சாவு ஊண் துயில் அரசு நடை
மயில் துயில் சாவு அரசு நடை ஊண்
காகம் அரசு துயில் நடை ஊண் சாவு

வெள்ளி
கோழி சாவு ஊண் துயில் அரசு நடை
வல்லூறு துயில் சாவு அரசு நடை ஊண்
ஆந்தை அரசு துயில் நடை ஊண் சாவு
மயில் நடை அரசு ஊண் சாவு துயில்
காகம் ஊண் நடை சாவு துயில் அரசு

தேய்பிறை – இரவு
கிழமை பட்சிகள் 6.00 – 8.24 8.24 – 10.48 10.48 – 1.12 1.12 – 3.36 3.36 – 6.00
ஞாயிறு செவ்வாய்
கோழி நடை ஊண் அரசு துயில் சாவு
வல்லூறு சாவு துயில் ஊண் நடை அரசு
ஆந்தை அரசு நடை துயில் சாவு ஊண்
மயில் ஊண் சாவு நடை அரசு துயில்
காகம் துயில் அரசு சாவு ஊண் நடை

சனி
கோழி ஊண் சாவு நடை அரசு துயில்
வல்லூறு துயில் அரசு சாவு ஊண் நடை
ஆந்தை நடை ஊண் அரசு துயில் சாவு
மயில் சாவு துயில் ஊண் நடை அரசு
காகம் அரசு நடை துயில் சாவு ஊண்

திங்கள்
புதன்

கோழி சாவு துயில் ஊண் நடை அரசு
வல்லூறு அரசு நடை துயில் சாவு ஊண்
ஆந்தை ஊண் சாவு நடை அரசு துயில்
மயில் துயில் அரசு சாவு ஊண் நடை
காகம் நடை ஊண் அரசு துயில் சாவு

வியாழன்
கோழி அரசு நடை துயில் சாவு ஊண்
வல்லூறு ஊண் சாவு நடை அரசு துயில்
ஆந்தை துயில் அரசு சாவு ஊண் நடை
மயில் நடை ஊண் அரசு துயில் சாவு
காகம் சாவு துயில் ஊண் நடை அரசு

வெள்ளி
கோழி துயில் அரசு சாவு ஊண் நடை
வல்லூறு நடை ஊண் அரசு துயில் சாவு
ஆந்தை சாவு துயில் ஊண் நடை அரசு
மயில் அரசு நடை துயில் சாவு ஊண்
காகம் ஊண் சாவு நடை அரசு துயில்

படுபட்சி தினம்
வளர்பிறை
வியாழன், சனி – வல்லூறு
வெள்ளி, ஞாயிறு – ஆந்தை
திங்கள் – காகம்
செவ்வாய் – கோழி
புதன் – மயில்

தேய்பிறை
வியாழன், சனி - கோழி
வெள்ளி,புதன் - மயில்
ஞாயிறு - காகம்
திங்கள் - ஆந்தை
செவ்வாய் - வல்லூறு

படுபட்சி தினங்களில் செய்யும் காரியங்களில் மிகவும் கவனம் செய்து கொள்ளல் நன்று.
பட்சிகளின் நட்பு, பகை
வளர்பிறை
பட்சி நட்பு
வல்லூறு மயில், ஆந்தை
ஆந்தை வல்லூறு,காகம்
காகம் ஆந்தை,கோழி
கோழி மயில்,காகம்
மயில் வல்லூறு,கோழி

பட்சி பகை
வல்லூறு காகம், கோழி
ஆந்தை மயில்,கோழி
காகம் வல்லூறு,மயில்
கோழி வல்லூறு,ஆந்தை
மயில் ஆந்தை,காகம்

தேய்பிறை
பட்சி நட்பு
வல்லூறு மயில்,காகம்
ஆந்தை கோழி,காகம்
காகம் ஆந்தை,வல்லூறு
கோழி மயில்,ஆந்தை
மயில் வல்லூறு,கோழி

பட்சி பகை
வல்லூறு ஆந்தை,கோழி
ஆந்தை வல்லூறு,மயில்
காகம் மயில்,கோழி
கோழி காகம்,வல்லூறு
மயில் ஆந்தை,காகம்

பட்சி பார்க்கும் காலத்தில், தன்னுடய பட்சி அரசு, ஊணில் இருக்கும் போது மகிழ்ச்சியான நேரமாகவும், எந்த செயலும் சுலபமாக முடிவடைதலும், பொருள்கள் வந்து சேர்தலும், மங்களமான விசயங்கள் நடை பெறுதலும் கூடும்.
பட்சி பார்க்கும் காலத்தில், தன்னுடய பட்சி நடை, துயில், சாவு ஆகியவற்றில் இருக்கும் போது நினைத்த காரியங்கள் நடக்காமல் போதல், பொருள் சேதம், உறவு பகையாதல், வழக்குகள் தோற்றல் ஆகியவை நேரக்கூடும்.

3 comments:

  1. உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி. மேலும் விளக்கங்களை அளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    ReplyDelete
  2. Paravaigal manithan mel viluvathu nallatha?

    ReplyDelete
  3. பஞ்சபட்சி சாஸ்திரம் பற்றி புத்தகம் ஏதேனும் சொல்லவும். குறிப்பாக அகத்தியர் புத்தகத்தின் பெயர் மற்றும் விலை கூறவும்.

    ReplyDelete