Wednesday, June 26, 2013

கமலின் மன்மதலீலை ரீமேக் ஆகிறது!






ரஜினியைக்கொண்டு கே.பாலசந்தர் இயக்கிய படம் தில்லுமுல்லு. இப்படத்தின் ரீமேக்கில் சிவா நடித்திருந்தார். படம் ஓரளவு வெற்றி பெற்றிருப்பதால், இப்போது அப்படத்தை இயக்கிய பத்ரி மீண்டும் கே.பாலசந்தர் கமலை வைத்து இயக்கிய மன்மதலீலை படத்தை ரீமேக்
செய்யப்போவதாக கூறுகிறார்.


இதுபற்றி அவர் கூறுகையில், ரஜினி நடித்த தில்லுமுல்லு படத்தை இந்த காலகட்டத்துக்கேற்ப ரீமேக் செய்தேன். படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனால், அடுத்து பாலசந்தரின் இன்னொரு படமான மன்மதலீலை படத்தையும் ரீமேக் செய்யும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இன்றைய காலகட்ட நடிகர்களில் கமலின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பொருத்தமான நடிகராக தேர்வு செய்து நடிக்க வைப்பேன்.

மேலும், தில்லுமுல்லு படத்தைப்போலவே இந்த படத்திலும் அதன் கருவை எடுத்துக்கொண்டு இன்றைய நவீன காலத்தில் பெண்களின் கற்புடன் விளையாடும் ஒரு இளைஞன் எப்படி இருப்பான் என்பதற்கேற்ப கதையில் மாற்றங்கள் செய்வேன் என்று சொல்லும் பத்ரி, மன்மதலீலையில் இடம்பெற்ற காலத்தால் அழியாத எம்.எஸ்வியின் பாடல்களான மனைவி அமைவதெல்லாம், ஹலோ மைடியர் ராங் நம்பர் ஆகிய பாடல்களையும் ரீமிக்ஸ் செய்து படத்திற்கு பயன்படுத்துவேன் என்கிறார்.

No comments:

Post a Comment