Thursday, July 25, 2013

ஆற்காடு சாலையில் சூர்யாவின் கனவு மாளிகை

சினிமா உலகில் ஆயிரத்தில் ஒரு ஜோடிக்குத்தான் இப்படி ஒரு வாழ்க்கை அமையும். இன்றைய நிலையில், அந்த அதிர்ஷ்டமான ஜோடி சூர்யாவும் ஜோதிகாவும்தான்!  வெள்ளித்திரையில் இருவரையும் ஜோடியாகப் பார்த்தவர்கள், இவர்கள் இருவரும் வாழ்க்கையில் நிஜமான ஜோடியாக மாறினால் சூப்பராக இருக்கும் என்று சொல்லாதவர்களே
இல்லை எனலாம்!  "உயிரிலே கலந்தது' என்ற படத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் ஜோடியாக நடித்தபோதே துளிர்விட்ட காதல் இருவரையும் உயிரோடு உயிராக கலக்கவைத்துவிட்டது என்றால் அது மிகையில்லை!  ஜோதிகாவை சூர்யாவுக்கு மட்டும் அல்ல, அவர்கள் வீட்டில் அத்தனை பேருக்குமே பிடிக்கும் ! அவ்வளவு அன்பு; அமைதி; அடக்கம்! அக்கறையான பேச்சு, மரியாதை இத்தனையும் இன்றைக்கும் தொடர்கிறது ஜோதிகாவிடம்.  ஆரம்பத்தில் சூர்யாவை மட்டுமே சுற்றிச் சுற்றி வந்த ஜோதிகா இரண்டு குழந்தைகளுக்கு தாயானதும் முழுக்க முழுக்க குடும்பப் பெண்ணாகவே மாறிவிட்டார். இப்போது குழந்தைகள்தான் அவரது உலகம் என்கிறார்கள், அடிக்கடி அவரைச் சந்திக்கும் தோழிகள். சினிமாவை மறந்துவிட்டார் ஜோதிகா; ஆனால் சினிமாவில் சூர்யாவின் உழைப்புக்கும் வெற்றிக்கும் ஜோதிகாவின் பங்கு அளப்பரியது என்கிறார்கள் அதே தோழிகள்!  முன்பு சூர்யா நடித்த "சிங்கம்' படத்தை ஜோதிகாவுடன் சேர்ந்து பார்த்தபோது சூர்யாவின் கையைப் பிடித்து குலுக்கி பாராட்டினாராம் ஜோதிகா!  இப்போது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "சிங்கம்-2' படத்தை சூர்யாவும் ஜோதிகாவும் தனியாக ஒரு தியேட்டரில் பார்த்தார்கள். அன்று ஜோதிகா ரொம்பவே உற்சாகத்துடன் இருந்திருக்கிறார். ஜெட் வேகத்தில் படம் ஓடிமுடிந்தபோது, எழுந்து நின்று பலமாக கைதட்டிய ஜோதிகா, பக்கத்தில் இருந்த சூர்யாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டாராம்! கண்களில் ஆனந்தக் கண்ணீர்! அப்படி ஒரு மகிழ்ச்சி ஜோதிகாவின் முகத்தில்!  இத்தனை அன்பும் ஆசையும் காதலும் கொண்ட மனைவி ஜோதிகாவுக்கு ஒரு கனவு மாளிகையைக் கட்டி அதில் ஆனந்தமாக வாழவைக்க வேண்டும் என்பது சூர்யாவின் ஆசை.  எங்கே இடம் கிடைக்கும் என்று தேடிக் கொண்டே இருந்தார். சென்னையின் மையப்பகுதியான தியாகராயநகரில், கிருஷ்ணா தெருவில் சிறுவயது முதல் ஓடிஓடி விளையாடிய சொந்த வீட்டுக்கு அடுத்த தெருவிலேயே நல்ல இடம் கிடைத்தது.  மறைந்த "பொன்மனச் செம்மல்' எம்.ஜி.ஆர். அவர்கள் பல ஆண்டுகாலம் அலுவலகமாகப் பயன்படுத்தி பின்னால் நினைவு இல்லமாக மாறியிருக்கும் அதே ஆற்காடு தெருவில்தான் ஜோதிகாவுக்காக சூர்யா கட்டும் "காதல் மாளிகை' அல்லது கனவு மாளிகை கம்பீரமாக உருவாகி வருகிறது! ஆற்காடு தெருவின் ஒரு கோடியில் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் என்றால், அடுத்த கோடியில் சூர்யாவின் கனவு இல்லம் கம்பீரமாக கட்டப்பட்டு வருகிறது. வீட்டுக்கு எண்- 22.  மூன்று அடுக்கு மாடி. வெளிப்புற பகுதி முழுவதும் புல்வெளியுடன் கூடிய அழகிய பூந்தோட்டம்! வீடு முழுக்க மார்பிள். கண்ணாடி அறைகள். குட்டியாக ஒரு நீச்சல் குளம். படங்களை வீட்டிலேயே பார்க்க மினி தியேட்டர். அத்தனையும் கம்ப்யூட்டர்மயம் என்று லேட்டஸ்ட் ஜெர்மன் மாடலில் வீடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.  ஒரே காம்பவுண்டில் கட்டப்படும் இந்த கனவு மாளிகையில் ஒரேமாதிரி ஸ்டைலில் 3 வீடுகள் இருக்குமாம்! இதில் அப்பா, அம்மா, தம்பி கார்த்தி குடும்பத்தோடு சூர்யாவும், ஜோதிகாவும் குழந்தைகளுடன் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வசிக்கப்போகிறார்களாம். இந்த வீட்டுக்கு பெயர் என்ன தெரியுமா? "லட்சுமி இல்லம்', யார் இந்த லட்சுமி? சூர்யா, கார்த்தியின் தாய்! சிவகுமாரின் இல்லத்தரசி! அம்மா மீது அளவற்ற அன்பு அவர் பெற்ற பிள்ளைகளுக்கு!  இந்த ஒரு கூட்டு பறவைகளை ஒரே இடத்தில் சந்திக்கலாம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில்!  ஜோதிகாவுக்கு  ஒரு கனவு மாளிகையை  கட்டி அதில் ஆனந்தமாக  வாழவைக்க வேண்டும்  என்பது சூர்யாவின் ஆசை

No comments:

Post a Comment