புதிய வலைத்தளங்களை உருவாக்கி பயன்படுத்த முடியாதவர்கள் இனிமேல் தங்கள் பேஸ்புக் பக்கத்தை வலைத்தளமாக மாற்றிக்கொள்ள வகை செய்யும் புதிய செயலி
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேஜர் எனப்படும் ஆப் ஒன்றை மூன்று பொறியாளர்கள் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளார்கள். இது சிறிய அளவில் தொழில் நடத்துபவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது.
முதலில் பேஜர் ஆப்பில் நுழையும்போது அது உங்கள் பேஸ்புக் நுழைவாயில் பகுதிக்கு செல்லும். அங்கு உங்கள் மின் அஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி பேஸ்புக் பக்கத்திற்கு செல்லும்போது அங்கு உங்களின் பல்வேறு பேஸ்புக் பக்கங்கள் வரிசையாக தோன்றும், அதில் நீங்கள் ஒன்றை தேர்வு செய்யும்போது அதில் உள்ள தகவல்கள் ஒரு புதிய வலைத்தளமாக மாறும்.
வலைத்தளமானது அறிமுகம், செய்தி, நிகழ்வுகள் மற்றும் காலரி என்ற நான்கு பகுதிகளை கொண்டதாக இருக்கும். இந்த புதிய ஆப் இன்னும் முழுமையாக உருவாக்கப்படவில்லை. இது முழுமையாக பயன்பாட்டிற்கு வரும்போது சிறிய தொழில் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் பதியப்படும் தகவல்களை கொண்டு புதிய வலைத்தளத்தை உருவாக்கி பயன்பெறமுடியும்.
No comments:
Post a Comment