Thursday, May 07, 2015

இந்தியாவில் துவங்கப்பட்ட டோஹா வங்கி

கத்தாரை மையமாகக்கொண்டு விளங்கும் டோஹா வங்கி இந்தியாவில் தனது முதல் கிளையை மும்பையில்
தொடங்கியுள்ளது. 



தொடக்க விழாவில் இவ்வங்கியின் தலைவர் எச்.இ.ஷெய்க் ஃபஹத் பின் முகம்மது பின் ஜபோர் அல் தானி, நிர்வாக இயக்குனர் எச்.இ.ஷெய்க் அப்துல் ரகுமான் பின் முகம்மது பின் ஜபோர் அல் தானி, சபை உறுப்பினர் அகமது அல் கால், தலைமை செயல் அதிகாரி ஆர்.சீதாராமன் மற்றும் மூத்த நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். 

தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.சீதாரமன் கூறுகையில், “இதுவரை 15 நாடுகளில் டோஹா வங்கிக்கு கிளைகள் உள்ளன. இந்தியாவின் பெரும் வணிகச் சந்தை, சிறந்த வணிகக் கொள்கைகள் மற்றும் அதிகரித்துவரும் தனி நபர் வருமானம் ஆகியவை இந்தியாவை டோஹா வங்கி செயலாற்ற சிறந்த இடமாக மாற்றியுள்ளன. வரும் வருடங்களில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் மேலும் எங்களது கிளைகளைப் பரப்புவதிலும்  புதிய அணுகுமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வாடிகையாளர்களுக்கு சிறந்த சேவையை அளிப்பதிலும் கவனம் செலுத்தவுள்ளோம்.” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment