Wednesday, November 13, 2013

பாட்டு எழுதும் புதிய மென்பொருள்- மதன் கார்க்கியின் கண்டுபிடிப்பு





வைரமுத்து மகன் மதன் கார்க்கி இப்போது சினிமாவில் மோஸ்ட் வாண்டட் பாடலாசிரியர். சிறிய படம் பெரிய படம் எதுவாக இருந்தாலும் பாடல் எழுதக்கூடியவர்.
இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்காமல் கொடுப்பதை மனமுவந்து ஏற்றுக் கொண்டு பாடல் எழுதுவார். அடிப்படையில் மதன் கார்க்கி ஒரு கம்ப்யூட்டர் பொறியாளர். அண்ணா பல்கலை கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றிவர். தற்போது வேலையை ராஜினாமா செய்து விட்டு முழுநேர பாடலாசிரியராகி விட்டார்.

மதன் கார்க்கி ஏற்கெனவே தனது கார்க்கி ரிசர்ச் செண்டர் மூலம் தமிழ் அகராதி, ஒலிங்கோ என்னும் டிரான்ஸ்லேட்டர், சர்ச் பிலிம் சாங் போன்ற மென்பொருளை உருவாக்கி அதை பயன்பாட்டுக்கு விட்டுள்ளார். இப்போது ஒரு திரைப்படத்தில் பாடல் வரும் சூழ்நிலையை பதிவேற்றம் செய்தால் கம்ப்யூட்டரே பாடல் எழுதித்தரும் மென்பொருளை உருவாக்கி இருக்கிறார்.

இதுகுறித்து மதன் கார்க்கி கூறியிருப்பதாவது: சினிமா பாட்டு கவிஞனின் ஆன்மாவிலிருந்து எழுதப்படுவதல்ல. கதை, காட்சி, மெட்டுக்கு ஏற்ற மாதிரி எழுதப்படுவது. இதற்கு கவிஞனின் உணர்வு முக்கியமில்லை. அதற்கேற்ற வார்த்தையை தேடிக் கண்டுபிடிப்பதே முக்கியம். அதனை கம்ப்யூட்டர் செய்து விடும். காதல், தீ, பூ, உலகம், காற்று இந்த வார்த்தைகள்தான் பாடலில் அதிகம் பயன்படுத்தப்படும். எந்ததெந்த சூழ்நிலைக்கு எந்த வார்த்தைகள் தேவைப்படும் என்பதை முடிவு செய்து இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. சூழ்நிலையை பொருத்தினால் அது தொடர்புடைய வார்த்தைகளை இணைத்து பாடலாக தந்துவிடும். சின்ன திருத்தங்களை செய்தால் போதும்.

காதல் சூழ்நிலைய என் மென்பொருளுக்கு கொடுத்தபோது அது உருவாக்கி தந்த முதல் வாக்கியம் திருவிழாவைப்போன்ற சந்தோஷம் தரும் உறவு என்ற வாக்கியத்தை தந்தது. இதனை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டபோது இது என் தந்தை அல்லது வாலி எழுதிய வார்த்தை போன்று இருப்பதாகச் சொன்னார்கள். இந்த முயற்சி பாடலாசிரியர்களின் திறமையை குறைக்க அல்ல. தொழில்நுட்பத்தின் பலத்தை அவர்களுக்கு வழங்குவதற்காக என்றார்.

No comments:

Post a Comment