களிகை ஜி.ஜெயசீலன் வழங்க ஜெனி பவர்புல் மீடியா நிறுவனம் சார்பாக பெல்சி ஜெயசீலன் தயாரிக்கும் படம் 'அதுவேற இதுவேற' எம்.திலகராஜன் இயக்கும் இப்படத்தில் வர்ஷன் ஹீரோவாக நடிக்கிறார். இவர்
பிரபல காமெடி நடிகர் ஜெயமணியின் மகன் ஆவார். ஹீரோயினாக சானியா தாரா நடிக்கிறார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி முதல் முறையாக முழு காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஷகீலா சிங்கமுத்து, கஞ்சா கருப்பு, தியாகு ஆகியோர் நடித்துள்ளனர்.தாஜ்நூர் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை நா.முத்துகுமார் எழுதியுள்ளார். விரைவில் வெளியாக உள்ள இப்படம் சமீபத்தில் சென்சார் அதிகாரிகளுக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்களாம். மேலும் படத்தை பார்த்த சில திரை பிரமுகர்களும் பாராட்ட, தற்போது இப்படம் வினியோகஸ்தர்கள் மத்தியில் போட்டியை ஏற்படுத்தியுள்ளதாம்.ஆம், எப்போது பெரிய படங்களை வாங்குவதற்காக போட்டி போடும் வினியோகஸ்தர்கள், தற்போது 'அதுவேற இதுவேற' படத்தை வாங்க போட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறார்களாம்.
No comments:
Post a Comment