
இந்த தாக்குதலை நடத்திய 19 தீவிரவாதிகள் உள்பட 2996 பேர் இந்த கோர தாக்குதலில் பலியாகினர்.
சிதைந்துப் போன இரட்டை கோபுரம் கட்டிடத்தை இடித்து விட்டு,
அதே இடத்தில் அதற்கு இணையாக புதிய வர்த்தக மையத்தை கட்டும் பணி 18-11-2006 அன்று தொடங்கியது.
கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து இந்த கட்டிடம் புதிய வர்த்தக மையம் என்ற பெயரில் விரைவில் திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில், 408 அடி கூம்பு பகுதியுடன் ஆயிரத்து 776 அடி உயரத்தில் வானளாவ உயர்ந்துள்ள இந்த கட்டிடம் அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டிடம் என்ற சிறப்பிடத்தை பிடித்துள்ளது.
இதுவரை சிகாகோ நகரின் வில்லிஸ் கோபுரம் வகித்து வந்த அமெரிக்காவின் உயரமான கட்டிடம் என்ற சிறப்பு தற்போது புதிய உலக வர்த்தக மையத்தை வந்தடைந்துள்ளது
No comments:
Post a Comment