Thursday, November 14, 2013

பொங்கலுக்கு ரஜினியின் கோச்சடையான் ரிலீஸ் - சிக்கலில் அஜீத்-விஜய் படங்கள்!


2014ம் ஆண்டு பொங்கலுக்கு அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது ரஜினியின் கோச்சடையான் படமும் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜீத், விஜய் படங்களுக்கு சிக்கல் உருவாகியுள்ளது. 


ரஜினி நடிப்பில் அவரது மகள் செளந்தர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோச்சடையான். ரஜினி ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், ஷோபனா, ருக்மணி, நாசர், ஆதி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். ரஜினி, அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

ரஜினி உடல்நலம் சரியில்லாமல் போய் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த பிறகு நடித்துள்ள படம் இது. முதன்முறையாக ரஜினி 3டி அனிமேஷன் படத்தில் நடித்துள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக அவதார், டின்டின் படங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோசன் கேப்டசரிங் தொழில்நுட்பம் கோச்சடையான் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து கிராபிக்ஸ், பின்னணி இசை உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடைபெற்று வந்தன. அதேசமயம் ஏற்கனவே இப்படத்தின் சிறிய டீஸர் ஒன்றும், ஒருபாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

முன்னதாக கோச்சடையான் படத்தை ரஜினியின் பிறந்தநாளில் டிசம்பர் 12 அன்று வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இப்போது அதுவும் தள்ளிபோய் உள்ளது. படத்தை பொங்கலுக்கு முன்னதாக ரிலீஸ் பண்ணுகின்றனர்.

ஜனவரி 10-ல் கோச்சடையான் ரிலீஸ்

இதுகுறித்து கோச்சடையான் படத்தின் இணை தயாரிப்பாளரும், மீடியா ஒன் அதிபருமான டாக்டர் முரளி மனோகர் கூறியுள்ளதாவது, படத்திற்கான அனைத்துப் பணிகளும் முடிந்து, இப்போது பின்னணி இசை சேர்ப்பு பணி நடக்கிறது. டிசம்பரில் ஆடியோவை ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளோம், ஆனால் தேதி முடிவாகவில்லை. ரஜினி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து படைக்கும் விதமாக பொங்கலுக்கு சில தினங்கள் முன்னர் அதாவது ஜனவரி 10ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதற்கான விளம்பர பணிகள் அடுத்த மாதம் துவங்குகிறது என்று கூறியுள்ளார். 

அஜீத்-விஜய் படங்களுக்கு சிக்கல்



இதனிடையே ஏற்கனவே அஜீத்தின் வீரம் படமும், விஜய்யின் ஜில்லா படமும் பொங்கலுக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவரது படம் ரிலீஸானாலே தமிழகத்தில் அநேக தியேட்டர்களை கைப்பற்றி விடுவர், அதுமட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்படும். அப்படி இருக்கையில் இருவரது படங்களும் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் எப்படி தியேட்டர்களை ஒதுக்குவது என்று இப்போதே விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் குழம்பியுள்ளனர். 

இந்நிலையில் ரஜினியின் கோச்சடையான் படமும் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரஜினி படம் என்றாலே வசூல் அள்ளிவிடலாம் என்பது தியேட்டர் அதிபர்கள் கருத்து. இதனால் தியேட்டர் அதிபர்கள் அவருக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால் இந்த பொங்கலுக்கு அநேக தியேட்டர்கள் கோச்சடையானுக்கு தான் அளிக்கப்படும் என தெரிகிறது. இதனால் அஜீத், விஜய் படங்களுக்கு தியேட்டர் குறைவாவதுடன், வசூல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது. எனவே கோச்சடையான் ரிலீஸ்க்கு சிலவாரங்கள் கழித்து வீரம், ஜில்லா படங்களை ரிலீஸ் செய்யலாமா அல்லது அதற்கு முன்பாகவே ரிலீஸ் செய்யலாமா என படக்குழு யோசித்து வருகிறது. இதனால் வீரம், ஜில்லா படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment