Tuesday, June 25, 2013

பறக்கும் சைக்கிளை உருவாக்கிய இங்கிலாந்து இளைஞர்கள்







இங்கிலாந்தை சேர்ந்த இரண்டு இளம் விஞ்ஞானிகளின் தீவிர முயற்சியில் உலகின் முதல் பறக்கும் சைக்கிள் உருவாகியுள்ளது. எக்ஸ்ப்ளோர்ஏர் பாரவெலோ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த சைக்கிள்
சாகச விரும்பிகளின் தாகத்தை தீர்க்கும் அத்துனை அம்சங்களையும் கொண்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகள் அயராத உழைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய பறக்கும் சைக்கிளை 50,000 பவுண்ட் செலவில் வடிவமைத்துள்ளனர். சோதனைகளில் வெற்றியடைந்துள்ளதால், வர்த்தக ரீதியில் தயாரிப்பதற்கு நிதி உதவிக்காக இதனை உருவாக்கிய இரண்டு இளம் விஞ்ஞானிகளும் காத்திருக்கின்றனர். கிளைடர் விமானம் போன்றும், சாதாரண சைக்கிளாகவும் பயன்படுத்தும் வசதி கொண்டது..
இந்த பறக்கும் சைக்கிள் இரண்டு பிரிவுகளை கொண்டது. சாதாரண சைக்கிளின் பின்புறம் உயிரி எரிபொருளில் இயங்கும் பெரிய விசிறி பொருத்தப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பாரசூட் ஒன்றும் பொருத்தப்பட்டு இருக்கிறது. 
கால் பந்து மைதான அளவுக்கு காலியிடம் இருந்தால் போதுமானது. இந்த சைக்கிள் வானில் மேலே எழும்பி பறக்கிறது.
உயிரி எரிபொருளில் இதில் பொருத்தப்பட்டிருக்கும் பெரிய விசிறி இயங்குகிறது. இதன்மூலம், 3 மணி நேரம் வானில் பறக்க முடியும்.

வானத்தில் 25 கிமீ வேகம் முதல் 40 கிமீ வேகம் வரை செல்லும்.
4,000 அடி உயரம் வரை இந்த சைக்கிளில் பறக்க முடியும்.
இந்த பறக்கும் சைக்கிளில் சைக்கிளை தனியாக பிரிக்க முடியும். சாகசப் பயணங்கள் செல்வோர் பாரசூட்டை, கூடாரமாக பயன்படுத்தவும், சைக்கிளில் ஒரு ரவுண்டு செல்வதற்கும் பயன்படுத்தலாம்.
இந்த சைக்கிளில் பறப்பதற்கு லைசென்ஸ் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சைக்கிள் மடக்கும் வசதி கொண்டது, எனவே, இந்த சைக்கிளுடன் கொடுக்கப்பட்டிருக்கும் பேக்பேக்.,கில் வைத்து கார், பஸ், ரயில் போன்றவற்றில் எளிதாக எடுத்துச் செல்லலாம்.




No comments:

Post a Comment