Saturday, March 30, 2013

இணைய இணைப்பின் வேகத்தை கூட்ட

அதிவேக இணைய இணைப்புக்கு அதிக கட்டணங்கள் செலுத்த வேண்டியிருப்பதால், மிதவேக இணைப்பு பெற்றிருப்போம். ஆனால் அவற்றின் குறைந்த வேகத்தால் எரிச்சல் தோன்றும். இது போன்ற நேரங்களில் இணைய இணைப்பை நொந்து கொள்ளாமல், எளிதாக நம் கம்ப்யூட்டரில் சில மாற்றங்களைச் செய்து இணைய இணைப்பை வேகப்படுத்தலாம். 


மின்னஞ்சல் அனுப்பும்போது ஒன்றுக்கு மேற்பட்ட ஃபைல்களை இணைத்து அனுப்ப முயற்சிக்கிறீர்களா? ஒவ்வொரு ஃபைலையும் தேர்ந்தெடுத்த் அனுப்பிக்கொண்டிருக்காம, அனைத்து ஃபைல்களையு மொத்தமாக சுருக்கி (Zip) அனுப்புங்கள். இதனால் இணைக்கப்படும் ஃபைலகளின் கொள்ளளவு மிகக் குறைவானதாக இருக்கும். ஆமை / நத்தைவேக இணைய இணைப்பு கூட இந்தச் சுருக்கப்பட்ட ஃபைல்களால் ஆன அட்டாச்மென்ட்டை எளிமையாக பெறுநருக்கு அனுப்பிவிடும்.  
வீடியோக்கள், படங்களால் ஆன வலைத் தளத்தைத் திறக்கும் போது மகா எரிச்சல் ஏற்படும். அந்தத் தளத்தில் உள்ள  படங்கள், வீடியோக்கள் தேவையில்லை எனில், "இனிமேல் படங்களையோ / வீடியோக்களையோ எனது பிரவுசர் திரையில் காட்டுவதை நிறுத்திவிடு" எனக் கட்டளையிடலாம். அதற்கு கீழ்க்கண்ட நடைமுறை பயன்படும்.
  • இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரில் Tools - Internet Options - Advanced - சென்றபிறகு Play animations in Web pages, Play sounds in Web pages,  Play videos in Web pages, Show pictures ஆகிய எல்லா செக்பாக்ஸ்களின் தேர்வுகளை 
  • விலக்கிவிடவும்.
ஒன்றுக்கு மேற்பட்ட பெறுநருக்கு ஒரே 
மின்னஞ்சலை அனுப்பவேண்டும் எனில், தனித்தனியாக அனுப்பி நேரத்தை வீணாக்காமல், பகிர்வு மின்னஞ்சல் மூலம் 

அவுட்லுக் போன்ற மின்னஞ்சல் கிளையன்ட் பயன்பாடுகளைப் பயன்படுத்தி, இணையத்திலிருந்து உங்களுக்கு வந்த மின்னஞ்சல்களை இறக்கிய பிறகு ஆர அமர மெதுவாகப் படியுங்கள். இவ்வாறு செய்தபிறகு ஒவ்வொரு மின்னஞ்சலைப் படிப்பதற்கும் இணைய இணைப்பு தேவையிருக்காது.

மின்னஞ்சலின் கையெழுத்துப் பகுதியில் தேவையில்லாமல் நிறையப் படங்களை அடுக்கடுக்காக வைக்காதீர்கள். இதற்கு மாற்றாக சிறிய அளவிலான கையெழுத்தையே பயன்படுத்தவும்.

ஒரு குறிப்பிட்ட வலைத்தளத்தின் குறிப்பிட்ட பக்கங்களையே திரும்பத்திரும்ப உலவ வேண்டி வந்தால், அந்தப் பக்கங்களை உங்களது கம்ப்யூட்டரில் ஆஃப்லைன் ஆகச் சேமித்து வைத்து அதனைப் பார்வையிடவும். இதனால் இணையத்தின் வேகம் பற்றிய பிரச்சினை கண்டிப்பாக இல்லாமல் போகும்.

இணையத்தில் உலவுவதற்காக உங்கள் கம்ப்யூட்டரின் கேஷ் நினைவகத்தை அதிகரிக்கவும்.
இதற்கு:
  • இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரில் Tools - Internet Options - Genaral- Temporary Internet Files -Settings - Check for newer versions of stored pages - Automatically கொடுக்கவும்.
  • Amount of disk space to use பகுதியில் நினைவகத்தின் கொள்ளளவுத் திறனை குறைந்த பட்சமாக 250 எம்பியாவது கொடுங்கள். அவ்வளவு தான்.


No comments:

Post a Comment