மணிரத்னம் இயக்கத்தில் 'தளபதி' படத்தில் கலெக்டர் வேடத்தில் அறிமுகமானார் அரவிந்த்சாமி. அதன் பின்னர் 'ரோஜா' படத்தில் கதாநாயகனாக நடிக்க, அதன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். 'ரோஜா' சர்வதேச அளவில் திரைப்பட ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது
. அழகான நடிகராக அரவிந்த்சாமி வலம் வந்தார். படங்களில் 'அரவிந்த்சாமி போல அழகான..' என்பது போன்ற வசனங்கள் அதிகம் இடம்பெற்றன. 'தாலாட்டு', 'என் சுவாசக் காற்றே' 'மறுபடியும்' 'மின்சாரக் கனவு', 'புதையல்' போன்ற படங்களில் நடித்தார். அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். தன்னுடைய நிறுவனத்தை நிர்வகிக்கத் துவங்கினார். சில வருடங்களுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே' படத்தில் அவர் கேட்டுக் கொண்டதற்காக, ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார். 'அலைபாயுதே' படத்திற்குப் பிறகு பலர் நடிக்க அழைத்தும், நடிப்பதை தவிர்த்து வந்தார் அரவிந்த்சாமி. ஒரு படத்தில் வில்லனாக நடிக்க அழைப்பு வந்தும் அவர் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், மணிரத்னம் இயக்க இருக்கும் படத்தில் அரவிந்த்சாமி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். கார்த்திக்கின் மகன் கௌதம், சமந்தா, அர்ஜுன், பசுபதி போன்றோர் நடிக்கும் இப்படத்தில், சமந்தாவின் தந்தையாக நடிக்க இருக்கிறார் அரவிந்தாமி என சொல்லப்படுகிறது. மணிரத்னத்திற்காக இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாலும், தொடர்ந்து படங்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.
No comments:
Post a Comment