Friday, May 04, 2012

காந்தி பயன்படுத்திய பொருட்களை ஏலத்தில் எடுத்த தொழிலதிபர்







தேசப்பிதா மகாத்மா காந்தி பயன்படுத்தியபொருட்களை, பிரிட்டனில் உள்ள ஏல நிறுவனத்திடம் இருந்து, இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஏலம் எடுத்துள்ளார்.
மகாத்மா காந்தி பயன்படுத்திய ராட்டை, மூக்குகண்ணாடி, பிரார்த்தனை புத்தகம், அவர் எழுதியகடிதங்கள் மற்றும்
அவர் சுட்டுக் கொல்லப்பட்டுவிழுந்த இடத்தில் ரத்தக் கறை படிந்திருந்த மண்,புற்கள் உள்ளிட்ட 23 பொருட்கள், பிரிட்டனைசேர்ந்த ஏல நிறுவனத்தின் வசம் இருந்தன.மும்பையை சேர்ந்த தொழில் அதிபரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான கமல்மொரார்க்கா என்பவர், பல லட்ச ரூபாய்கொடுத்து, அந்த பொருட்களை ஏலத்தில் எடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது:மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களைஏலம் எடுத்தது, மகிழ்ச்சியாக உள்ளது. தேசநலன் கருதி தான், இந்த பொருட்களை ஏலம்எடுத்தேன். இதை, மத்திய அரசே ஏலத்தில் எடுத்திருக்கலாம். 90 லட்ச ரூபாய் என்பது, அரசுக்கு ஒருபெரிய தொகை அல்ல. இந்த பொருட்களை அதிகவிலைக்கு விற்பதற்காக ஏலம் எடுக்கவில்லை. உணர்ச்சிப்பூர்வமான விஷயம் என்பதால், இதைசெய்தேன். இந்த பொருட்களை, டில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைத்தால்,மிகவும் மகிழ்ச்சி அடைவேன். இவ்வாறு, கமல் மொரார்க்கா கூறினார்.

No comments:

Post a Comment