Tuesday, May 01, 2012

திருட்டு பயமில்லா பயணத்திற்கு "காக்கும் கரங்கள்!'













: கோடை விடுமுறையில், அதிகமாக ரயில்களை பயன்படுத்தும் பயணிகளுக்கு, ஏற்படும் பாதுகாப்பு சிக்கல்களைத் தடுக்க, ரயில்வே பாதுகாப்பு படை, மற்றும் தமிழக ரயில்வே போலீசார் இணைந்து "காக்கும் கரங்கள்' என்ற, பாதுகாப்பு மையத்தை ஏற்படுத்தியுள்ளனர்.



மே மாதம் விடுமுறை காரணமாக, சென்னையிலிருந்து வெளியூர்களுக்கும், வெளியூர்களிலிருந்து சென்னைக்கும், ஏராளமான பயணிகள் வந்து செல்வர். அந்நேரங்களில், அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க, ரயில்வே பாதுகாப்பு படையும், ரயில்வே போலீசாரும் இணைந்து, "காக்கும் கரங்கள்' என்ற, பாதுகாப்பு மையத்தை ஏற்படுத்தியுள்ளனர்.


என்னென்ன பிரச்னைகள்? : இதன் மூலம், ரயில் நிலையங்களில் பயணிகளிடமிருந்து பொருட்கள் திருட்டு போதல், ஈவ்டீசிங், செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த மையம், சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில், அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது. இரண்டு மையங்களிலும் சேர்த்து, 50 போலீசார், பணியில் ஈடுபடுத்தப் பட்டு உள்ளனர்.


தொலைபேசி எண் உண்டு : இதுகுறித்து, தமிழக ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி., பொன் ராம் கூறியதாவது:
கோடை விடுமுறையில் ரயில் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தும் பயணிகளுக்கு, பிரச்னைகள் ஏற்படாமலிருக்க, "காக்கும் கரங்கள்' மையம் அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது. இதன் மூலம், பயணிகளுக்கு பிரச்னை ஏற்பட்டால், அவர்கள் அழைப்பதற்கு தொலைபேசி எண் வழங்கப்பட்டு உள்ளது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு, தங்கள் பிரச்னையை தெரிவிக்கலாம். தகவல் கிடைத்ததும், போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, நடவடிக்கை எடுப்பர். ரயிலில் பயணம் செய்யும் போது பிரச்னை ஏற்பட்டாலும், போலீசார் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று புகார் பெற்று நடவடிக்கை எடுப்பர். இவ்வாறு பொன் ராம் கூறினார்.


கோடை முடியும் வரை... : மூத்த மண்டல பாதுகாப்பு கமிஷனர் காந்தி கூறியதாவது: கோடை விடுமுறை முடியும் வரை, இந்த மையம் செயல்படும். அதற்கு பின், நிலைமையை பொறுத்து தொடர்வதற்கான முயற்சி எடுக்கப்படும். இந்த மையத்திற்கு, கட்டணமில்லாத தொலைபேசி எண் வழங்கப்படவில்லை. பயணிகள் புகார் தெரிவிக்கும் போது கட்டணம் வசூலிக்கப்படும். பயணிகளின் பாதுகாப்புக்காக இந்த மையத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் மட்டும் இது செயல்படுகிறது. சென்னை மண்டலத்தில் மட்டும் இது செயல்படுவதால், மற்ற இடங்களிலிருந்து புகார் பெற மாட்டோம் என்று இல்லை. சம்பந்தப்பட்ட இடத்திற்கு, தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு காந்தி கூறினார்.

No comments:

Post a Comment