பிரிட்டனைச் சேர்ந்த டாக்டர் ஜான் வைன்ஸ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், உலகிலேயே முதன்முறையாக எலக்ட்ரானிக் காசோலையை கண்டுபிடித்துள்ளனர். இதை
பயன்படுத்தும் முறை, வழக்கமான காசோலையைப் போன்றதுதான். இதிலும் கையெழுத்திட வேண்டும். ஆனால், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்து செல்லத் தேவையில்லை.
உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரிலிருந்து இன்டர்நெட் மூலமே பரிமாறிக் கொள்ளலாம். எனினும், இந்த எலக்ட்ரானிக் காசோலையில் எழுதுவதற்கு சிறப்பு டிஜிட்டல் பேனா தேவைப்படும். அதில் சிறிய கேமரா இணைக்கப்பட்டிருக்கும். இந்த பேனா வாடிக்கையாளருடைய கம்ப்யூட்டரில் மட்டும் வேலை செய்யும்படி வடிவமைத்து தரப்படும்.
பெயர், தேதி, தொகை உள்ளிட்ட காசோலையின் விவரங்களை இந்த பேனா, கம்பியில்லா இணைப்பு மூலம் வங்கிக்கு அனுப்பி விடும். இதை மற்றவர்கள் பயன்படுத்த முடியாது. எனவே, முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. இதை செயல்படுத்த வங்கிகளுடன் ஆராய்ச்சியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேனாவின் விலை ரூ.6,000. எனினும், பயன்பாடு அதிகமானால் விலை குறையும் என்கின்றனர் நிபுணர்கள்.
No comments:
Post a Comment