Tuesday, February 07, 2012

ஆகாஷ் டேப்லெட் மாணவர்களுக்கு இலவசமாக கிடைக்கும் : கபில் சிபல்




 மாணவர்களுக்காகவே மிகக் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டு வரும் ஆகாஷ் டேப்லெட்டை, இலவசமாக அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
பெங்களூரூவில் பேசிய மத்திய அமைச்சர் கபில் சிபல், ஆகாஷ் டேப்லெட்டில் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட சில பொருட்கள் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த திட்டத்தில் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் டேப்லெட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
தற்போது ஆகாஷ் டேப்லெட் ரூ.1500க்கு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில், மத்திய அரசும், கல்வி நிறுவனமும் தலா ரூ.750 செலுத்தினால், மாணவர்களுக்கு இலவசமாகவே ஆகாஷ் டேப்லெட் கிடைக்க வழி உள்ளது. இந்த திட்டத்தை பரிசீலித்து வருகிறோம் என கபில் சிபல் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment