சென்ற ஆண்டு மெகா ஹிட் பாடல்களில் ஒன்றுதான் 'எங்கேயும் எப்போதும்' படத்தில் இடம்பெற்ற 'மாசமா ஆறு மாசமா' பாடல். அப்பாடலுக்கு இசையமைத்த சி.சத்யாவின் இசையமைப்பில் 'சேவற்கொடி' படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடலும் தற்போது இந்த வருடத்தின் மெகா ஹிட் பாடலாகியிருக்கிறது. 'கம்பி மத்தாப்பூ கண்ணு கண்ணு' என்ற பாடல்தான் அது.
ஏற்கனவே அனைத்து வானொலிகளிலும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் இப்பாடலை கேட்பவர்கள் அனைவரும் 'இது எந்த படம்' என்று கேட்டுகொண்டிருக்க, இப்பாடலை கொண்ட 'சேவற்கொடி' விரைவில் வெளியாக இருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்பே மெகா ஹிட் ஆகியிருக்கும் இப்பாடல், படம் வெளியானப் பிறகு தமிழகத்தின் எங்கேயும் முணுமுணுக்கும் பாடலாக அமையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருப்பது மற்றொரு சிறப்பு அம்சமாகும். பல படங்களில் இணை இயக்குநராகவும், 'அபியும் நானும்' படத்திற்கு வசனம் எழுதியவருமான இரா.சுப்ரமணியன் இயக்கியிருக்கும் முதல் படம் இது. ஒரு திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் துவங்கும் கதை, அடுத்த வருட சூரசம்ஹாரத்தில் முடிந்துவிடுமாம். தமிழகத்தின் தலை சிறந்த நீச்சல் வீரரான அருண் பாலாஜி, இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர் தனது 8 வயதிலேயே தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை கடலில் 32 கி.மீட்டரை 10.41 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்திருக்கிறார். ஏற்கனவே சாதனை படைத்த குற்றாலீஸ்வரனின் சாதனையை முறியடித்த பெருமையும் இவருக்கு உண்டு. இவருக்கு ஜோடியாக பாமா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். இவர் கன்னட 'மைனா' படத்தின் நாயகி. இதில் 'பொல்லாதவன்' படத்தில் நடித்த பவன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் 'பிதாமகன்' மகாதேவன், ஸ்ரீரஞ்சனி, சாய் ஜெகன், மணிமாறன், கூத்துப்பட்டறை தயாள் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை, 'பனேரி பிக்சர்ஸ்' சார்பில் மகரந்த் கமலாகர் தயாரித்திருக்கிறார். அடடே!.... பறந்து பறந்து நீச்சலடிக்கப் போறாங்க போல......
No comments:
Post a Comment