Saturday, February 04, 2012

முக்தாவுடன் வெங்கட் பிரபு அடுத்த ஆட்டம்!











பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு. 'மங்காத்தா' வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபுவின் மார்க்கெட் உச்சத்துக்குப் போய்விட்டது. அவருக்கு கால்ஷீட் தர பல பிரபலங்கள் தயாராக உள்ளனர். இப்போது சூர்யா நடிக்கவிருக்கும் ஒரு படத்தை இயக்குகிறார்
வெங்கட். இந்தப் படம் முடிந்ததும் அடுத்த படத்தை முக்தாவுக்காக இயக்குகிறார். முக்தா வி.சீனிவாசன் பல வெற்றிப் படங்களை தந்தவர். சிவாஜி, ரஜினி, கமலை இயக்கியவர். இவரது சகோதரர் வி.ராமசாமி மகன் முக்தா கோவிந்துடன் இணைந்து இப்போது புதிதாக முக்தா என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் இனி ஆண்டுக்கு மூன்று புதிய படங்களைத் தயாரிக்கும். திறமையுள்ள இயக்குநர்களை வைத்து இந்தப் படங்களை உருவாக்க உள்ளது. அப்படி தயாரிக்கப்படும் ஒரு படத்தின் இயக்குநராகத்தான் வெங்கட் பிரபு ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் தலைப்பு, நட்சத்திரங்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாக உள்ளது. பேஷா ஆடுங்க பாஸ்.... நீங்கதான் பாலே இல்லாம சிக்ஸர் அடிப்பீங்களே....

No comments:

Post a Comment