Saturday, February 04, 2012

மீண்டும் இணையும் ரஜினி-ஜாக்கி ஷெராஃப்!


'கோச்சடையான்' படத்தில் ரஜினிகாந்துடன், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் இணைந்து நடிக்கிறார். படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) லண்டனில் தொடங்குகிறது. 'எந்திரன்' படத்தை அடுத்து ரஜினிகாந்த், 'ராணா' என்ற படத்தில் நடிக்க திட்டமிட்டார். அந்த படத்தின் தொடக்க விழா அன்று அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றபின், குணம் அடைந்தார். 'ராணா' படத்தில் அதிக 'ரிஸ்க்'கான சண்டை காட்சிகளும், குதிரையேற்ற காட்சிகளும் இடம்பெற்றிருப்பதால், அந்த காட்சிகளில் ரஜினிகாந்த் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் கருத்து தெரிவித்தார்கள்
. 'கோச்சடையான்' அதைத்தொடர்ந்து 'ராணா' படம் தள்ளிப்போடப்பட்டது. அந்த படத்துக்கு பதில், 'கோச்சடையான்' படத்தைத் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 'கோச்சடையான்' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்), லண்டனில் தொடங்குகிறது. முன்னதாக படத்தின் பூஜை முறைப்படி கடந்த வாரம் பெரிய அறிவிப்புகளின்றி நடத்தப்பட்டது. 'கோச்சடையான்' படத்தில் ரஜினிகாந்துடன் சரத்குமார், ஆதி, நாசர், சினேகா, ஷோபனா ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. வடிவேலும் நடிக்கக் கூடும் என்கிறார்கள். இப்போது, பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப்பும் நடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாக்கி ஷெராப், 'ஆரண்ய காண்டம்' என்ற படத்தின் மூலம் ஏற்கனவே தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர். ரஜினியுடன் ஏற்கனவே இந்திப் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment